முக்கோண காதல்- திருமண பிரச்னையில் பிரபல சீரியல் நடிகை: வீட்டில் அடிதடி; போலீசில் புகார்

Serial Update In tamil : சீரியல் நடிகை ஒருவர் தனது முதல் திருமணத்தை மறைத்து உதவி இயக்குநரை காதலித்து வந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tamil Serial Update : சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர், தனது முதல் திருமணம் குறித்து மறைத்ததால், இரு குடும்பங்களுக்கு இடையே அடிதடி மோதல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சீரியலுக்கு இருக்கும் வரவேற்பை போல சீரியல் நடிகைகளுக்கும் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இதில் சீரியல் நடிகைகள் திரையிலும், வாழ்கையிலும் எது செய்தாலும், அவை சமூக வலைதளங்களில் வைரலாவது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அந்த வகையில்,  சீரியல் நடிகை ஒருவர் தனது முதல் திருமணத்தை மறைத்ததால், காதலரின் குடும்பத்தினருடன் அடிதடி சண்டை அரங்கேறிய சம்பவம் சீரியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

சின்னத்திரையில் ஒரு ஹிட் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தவர் இந்த நடிகை, கடந்த 2019 ஆம் ஆண்டு கார் ஓட்டுநர் சரவணன்  என்வரை காதலித்து கோவிலில் எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார்.  அதன்பின்னர் இந்த திருமண விவகாரம் இரு குடும்பத்திற்கு தெரிய வர இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்ளுக்கு மீண்டும் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகத்து பெறவேண்டி நீதி மன்றத்திற்கு சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அந்த நடிகை தன்னுடன் தொடரில் பணியாற்றும் உதவி இயக்குனர் ஒருவருடன் காதல் ஏற்பட்டுஇருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இதில் அந்த நடிகை தனது முதல் திருமணத்தை உதவி இயக்குநரான தனது காதலரிடம் மறைத்த்தாக கூறப்படுகிறது. தற்போது இது குறித்து அறிந்த காதலர், ஆத்திரத்தில், நடிகையின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இதில் நடிகையின் உறவினர்கள் காதலரான உதவி இயக்குநரை தாக்கியத்தில் அவரது முகத்தில் ரத்தம் வடிந்து காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த காதலரின் உறவினர்கள் மீண்டும் நடிகை வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இதில் இருதரப்புக்கும் இடையே அடிதடி ஏற்பட்டதில் பலர் காயமடைந்துள்னர். கார்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும், இந்த அடிதடி சம்பவம் தொடர்பாக  மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress jennifer love and first marrige issue

Next Story
ஒரு விளையாட்டுக்கு அவரை புடிக்காதுன்னு சொன்னேன்..! சமாளித்த விஜய் டிவி ஜாக்குலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express