Advertisment

இவ்ளோ நாள் காணலையே... சன் டிவி ஹிட் சீரியலில் புதிதாக வரும் முக்கிய நடிகை!

Tamil Serial Update : சன்டிவியில் சித்தி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் சித்தி 2 சீரியலில் புதிய நடிகை எண்ட்ரி கொடுத்துள்ளார்

author-image
WebDesk
Aug 21, 2021 22:35 IST
இவ்ளோ நாள் காணலையே... சன் டிவி ஹிட் சீரியலில் புதிதாக வரும் முக்கிய நடிகை!

Tamil Serial Chithi 2 Update : 80-90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ராதிகா. தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், 90 களின் இறுதியில் சின்னத்திரையில் களமிறங்கினார். வெள்ளித்திரையை போல சின்னத்திரையிலும் பிரபலமான ராதிகா சித்தி, அண்ணாமலை, வாணி ராணி, உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்தார்.

Advertisment

இதில் கடந்த 1999-ம் ஆண்டு ஒளிபரப்பான சித்தி தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியலாக உள்ளது. குறிப்பாக 90 கிட்ஸ்கள் கவனத்தை ஈர்த்த இந்த சீரியல் கடந்த ஊரடங்கு காலத்தில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இன்றளவும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ளது என்றே கூறலாம்.

தற்போது இந்த சீரியலின் 2-ம் பாகம் சித்தி 2 என்ற பயரில் ஒளிபரப்பாகி வருகிறது. விறுவிறுப்பாக சென்ற இந்த தொடர் முதல் ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒளிபரப்பு செய்யும் போது சில முக்கிய கதாப்பாத்திரங்கள் மாற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்கள் சேர்க்கப்பட்டனர்.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த இந்த சீரியலில் இருந்து விலகுவதாக நடிகை ராதிகா திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், சீரியல் சுவாரஸ்யம் குறையாமல் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாகவே ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தற்போது மேலும் விறுவிறுப்பை அதிகரிக்க புதிய கதாப்பாத்திரம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளனர்.

ராதிகாவின் ஹிட் சீரியல்களில் ஒன்றான வாணி ராணி சீரியலில் நடித்து பிரபலமான நவ்யா சுவாமி தற்போது சித்தி 2 சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், நவ்யா சுவாமியின் வருகை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Chithi 2 Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment