Tamil Serial Actress Papri Ghosh Photo Gallery Update In tamil ; கடந்த 2009-ம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளியான கால்பீலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பாப்ரி கோஷ். தொடர்ந்து டூரிங் டாக்கீஸ், ஒய். பைரவா, சக்கைப்போடு போடு ராஜா, சர்கார் விஸ்வாசம் உள்ளிட்ட தமிழ் படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
Advertisment
தொடர்ந்து 2018-ம் ஆண்டு சன் டி.வி.யில் தொடங்கப்பட்ட நாயகி தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். தற்போது பாண்டவர் இல்லம் என்ற தொடரி்ல் முதன்மை வேடத்தில் நடித்து வருகிறார்.
Advertisment
Advertisement
மேலும் ரவுடி பேபி, பூவா தலையா உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ள பாப்ரி கோஷ், தற்போது சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வரும் பாப்ரி கோஷ். அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சீரியலில் ஹோம்லி லுக்கில் அசத்தும். பாப்ரி கோஷ், சமூக வலைதளங்களிலும் அதேபாணியை மெயிண்டெயின் செய்து வருகிறார்.
மார்டன் உடையில் இவர் புகைப்படங்கள் வெளியிட்டாலும் இவரின் ஹோம்லி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil