Advertisment

சின்னத்திரையில் இல்லனாலும்... நீங்க ஹீரோயின் தான்... இவரை தெரிகிறதா?

தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வியில் தொடங்கிய ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Priyanka

பிரியங்கா நல்காரி

தமிழ் சின்னத்திரையின் முன்னணி சீரியல் நடிகையாக இருந்த பிரியங்கா நல்காரி தற்போது சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அப்படியேதான் உள்ளது. இதில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisment
publive-image

சன் டி.வி.யின் ரோஜா சீரியல் மூலம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. தெலுங்கில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா நல்காரி.

publive-image

தொடர்ந்து 2014-ம் ஆண்டு தெலுங்கில், மகமாலா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி வைத்த பிரியங்கா நல்காரி, தெலுங்கிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார்.

publive-image

இதனையடுத்து தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வியில் தொடங்கிய ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இந்த சீரியல் அவருக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது.

publive-image

இந்த சீரியல் மூலம் பிரியங்கா என்ற இவரது உண்மையான பெயர் மறந்து பலரும் இவரை ரோஜா என்றே அழைக்கின்றனர். அந்த அளவிற்கு ரோஜா கேரக்டருக்கு பிரியங்கா உயிர் கொடுத்துள்ளார்.

publive-image

சமீபத்தில் அந்த சீரியல் முடிவடைந்த நிலையில்,  பிரியங்கா அடுத்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் சீரியல்ல நடித்து வந்தார். சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பிரியங்கா நல்காரி சீதாராமன் சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

publive-image

சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இருக்கும் பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது அவர் பச்சை நிற சேலையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Priyanka Nalkari
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment