Advertisment

ஆபாச மெசேஜ்... கொலை மிரட்டல்... கணவர் மீது நடிகை ரச்சிதா பரபரப்பு புகார்

நடிகை ரச்சிதா சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் தனது கணவர் தினேஷ் மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Denish and rachitha

தினேஷ் - ரச்சிதா மகாலட்சுமி

தனது கணவர் செல்போனில் தன்னை மிரட்டுவதாக பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் ரச்சிதா மகாலட்சுமி.  சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடன் சீரியலில் இணைந்து நடித்த நடிகர் தினேஷ் என்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு போரூரில் அடுக்குமாடி குடியிறுப்பில் வசித்து வந்த நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

ஆனால் இது குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில், சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதா தனது கணவர் குறித்து ஒரு வார்த்தை கூட பேச வில்லை. மாறாக ரச்சிதா குறித்து தினேஷ் டிவி பேட்டிகளில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் ரச்சிதா மகாலட்சுமி சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இதனிடையே நடிகை ரச்சிதா சென்னை மாங்காடு காவல் நிலையத்தில் தனது கணவர் தினேஷ் மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தான் கணவர் தினேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். கடந்த சில தினங்களாக தினேஷ் தனது செல்போனுக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பி தொல்லை கொடுத்து வருகிறார் மேலு் தன்னை செல்போனில் தொடர்புகொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்த புகார் குறித்து விசாரணை நடத்த நடிகர் தினேஷை காவல் நிலையத்திற்கு அழைத்ததாக கூறப்படும் நிலையில் விசாரணைக்கு காவல் நிலையம் வந்த தினேஷ், ரச்சிதா வேண்டுமானால் விவாகரத்து பெற நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்று சொல்லிவிட்டு என தெரிவித்துவிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment