scorecardresearch

நம்ம பாரதி அம்மா சௌந்தர்யாவா இது? 27 ஆண்டுக்கு முன் க்ளாமர் உடையில் ரூபாஸ்ரீ

பாரதி கண்ணம்மா இரண்டு சீசன்களிலும் நாயகனின் அம்மாவாக நடித்து வருபவர் பிரபல நடிகை ரூபாஸ்ரீ.

Roopa Sree
நடிகை ரூபாஸ்ரீ

பிரபல சீரியல் நடிகை ஒருவர் 27 வருடங்களுக்கு முன்பு க்ளாமர் உடையில் தோன்றிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தம்பதிக்களுக்கு இடையே சந்தேகம் வந்தால் என்ன நடக்கும் என்ற கருத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்து. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியலின் முதல் சீசன் முடிவடைந்த நிலையில், தற்போது 2-வது சீசன் ஒளிரப்பாகி வருகிறது.

இந்த இரண்டு சீசன்களிலும் நாயகனின் அம்மாவாக நடித்து வருபவர் பிரபல நடிகை ரூபாஸ்ரீ. 1992-ம் ஆண்டு வெளியாக எங்க வீ்ட்டு வேலன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து, பொண்டாட்டியே தெய்வம், டூயட், எல்லாமே என் ராசாதான், கங்கை கரை காற்று, புதையல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Roopa Srees
நடிகை ரூபாஸ்ரீ

கடைசியாக தமிழில், யாவரும் நலம் படத்தில் நடித்திருந்த ரூபா ஸ்ரீ, மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் சின்னத்திரையிலும் கால் பதித்துள்ள ரூபா ஸ்ரீ, உதிரிப்பூக்கள், வாணி ராணி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது பாரதி கண்ணம்மா சீசன் 2-ல் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரூபா ஸ்ரீ கடந்த 27 வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் க்ளாமர் உடையில் தோன்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நம்ம பாரதி அம்மா செளந்தர்யாவா இது என்று சந்தேகத்துடன் கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress rooba sree glamur pose before 27 years