சீரியலில் அழுகாட்சி... இப்போ அழகே காட்சி... பழைய கண்ணம்மாவின் வைரல் வீடியோ

Tamil Serial Update : ஹிந்தி பாடல் ஒன்றுக்கு அவர் கொடுத்துள்ள வித்தியாசமாக ரியாக்ஷன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Tamil Serial Update : ஹிந்தி பாடல் ஒன்றுக்கு அவர் கொடுத்துள்ள வித்தியாசமாக ரியாக்ஷன் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

author-image
D. Elayaraja
New Update
விவரிக்க முடியாத அழகு... விசித்திரமான புன்னகை... ரசிகர்களை கவரும் ரோஷ்னி

Tamil Serial Actress Roshni Haripriyan Viral Video : இன்றைய காலக்கட்டத்தில் சினிமா நட்சத்திரங்களை விட சீரியல் நட்சத்திரங்களுக்கே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. சீரியல் நாள்தோறும் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சீரியல் நடிகர் நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றனர்.

Advertisment

இதில் அவர்கள் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருவதால் அவர்களுக்கு உண்டான ரசிகர்கள் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சீரியலில் அறிமுகமாகி பாதியில் வெளியேறினாலும் அதிகமான ரசிகர்களை பட்டாளத்தை வைத்துள்ளவர் நடிகை ரோஷ்னி ஹரிப்பிரியன்.

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமான இவர், குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் ஸ்ராங்கான இடத்தை பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகினார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தவிர்க்க முடியாத சில காரணங்களால் விலகியதாக கூறியிருந்தார்.

அதன்பிறகு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ரியாலிட்டி ஷோவில் எண்ட்ரி கொடுத்த ரோஷ்னி, சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

ஹிந்தி பாடல் ஒன்றுக்கு அவர் கொடுத்துள்ள வித்தியாசமாக ரியாக்ஷன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வெள்ளை நிற ஆடையில் ப்ளூ நிற துப்பட்டாவுன் ரோஷ்னி ஹரிப்பிரியன் பக்கா பாரம்பரியமாக தோன்றியுள்ளார். சீரியலில் கூட பாரம்பரிய உடைக்கு பெயர் பெற்ற இவர், ரியல் லைஃப்பிலும் பெரும்பாலும் பாரம்பரிய உடைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Tamil Serial News Roshini

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: