Advertisment

பழங்கால பொருட்களுடன் பழைய கண்ணம்மா... டைம் ட்ராவல் பண்ணிட்டாரோ!

திரைத்துறையில்’ சாதிக்க நிறம் முக்கியமல்ல என்பதை நிரூபித்துள்ள ரோஷ்னி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார்.

author-image
WebDesk
New Update
Roshini Haripriyan

Roshini Haripriyan

விஜய் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமாகி இருந்தாலும் தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள நடிகை ரோஷ்னி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ரோஷ்னி ஹரிப்பிரியன். தனது சிறப்பான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தினார்.

publive-image

மேலும் இவரின் நடிப்பு மற்றும் முகபாவனைகளுக்காகவே பாரதி கண்ணம்மா சீரியலை பாக்கும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கும் கனிசமாக உயர்ந்தது.

publive-image

ஆனால் திடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து ரோஷ்னி பாதியில் விலகுவதாக அறிவித்தார். அவரது விலகலுக்கான காரணம் தெரியாத நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

publive-image

இவருக்கு பதிலாக வினுஷா தேவி கண்ணம்மா ரோலில் நடித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா முதல் சீசன் முடிவுக்கு வந்தது.

publive-image

அடுத்து சில நாட்களில் தொடங்கப்பட்ட பாரதி கண்ணம்மா 2-வது சீசனும் தற்போது முடிந்துவிட்டது. இதில் ரோஷ்னி ரீஎன்டரி கொடுப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திரைத்துறையில்’ சாதிக்க நிறம் முக்கியமல்ல என்பதை நிரூபித்துள்ள ரோஷ்னி விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் பிரபலமானார்.

publive-image

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது பழங்கால பொருட்களுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரோஷ்னி பேக் டூ டிராவல் என்று பதிவிட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment