Advertisment

சீரியல் நடிகையை திருமணம் செய்கிறாரா டி.டி.எஃப்.வாசன்?: உண்மையை உறுதி செய்த நடிகை

டிடிஎஃப் வாசன் தற்போது மஞ்சள் வீரன் என்ற படததின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sangeetha ttf Vasan

டிடிஎஃப் வாசன்

பைக் ஓட்டி சாகசங்கள் செய்து மக்கள் மத்தியில் பிரபலமான பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் பிரபல சீரியல் நடிகை ஒருவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் கடந்த சில வருடங்களாக முக்கிய கேரக்டரில் நடித்து வருபவர் சங்கீதா. விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் ஆதியின் மனைவியாக நடித்து வந்த இவர், தற்போது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சங்கீதா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதேபோல் சமூக வலைதளங்களில் மூலம் பிரபலமான டிடிஎஃப் வாசன், தனது இரு சக்கர வாகனத்தில் அதிகவேகமாக சென்று சாகசங்களை செய்து அதனை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். மேலும் இவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக பலமுறை போலீசாரால் கைது செய்யப்பட்டு வெளியில் வந்துள்ளார். தற்போது மஞ்சள் வீரன் என்ற படததின் மூலம் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

Sangeetha

திருமண அழைப்பிதழ்

இதனிடையே டிடிஎஃப் வாசனும், நடிகை சங்கீதாவும் காதலிப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. சங்கீதாவின் சகோதரரின் நெருங்கிய நண்பர்தான்  டிடிஎஃப் வாசன். அதோடு மட்டுமல்லாமல் சமீபத்தில் சங்கீதா தனது திருமண அழைப்பிதழில், மணமகன் பெயர் வி-என்ற எழுத்தில் தொடங்கும் என்று தெரிவித்திருந்ததால், அது வாசன் தான் என்று பதிவிட தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

ஆனால் உண்மை நிலவரம் என்னவெனில், சங்கீதா தனது வருங்கால கணவர் பெயர் விக்னேஷ் என்றும் வாசன் எனக்கு சகோதரர் தான் எதுவும் தெரியாமல் பேசாதீர்கள் என்றும், சங்கீதா தெளிவுப்படுத்தியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment