/indian-express-tamil/media/media_files/2025/10/10/shruti-shanmuga-priya-2025-10-10-18-39-15.jpg)
திருமணமாகி ஒரு வருடத்தில் கணவர் இறந்துவிட்டாலும், அவரது நினைவாகவே வாழும் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா, தனது கணவர் அவர் கையில் என் கண்ணை டாட்டூ போட்டிருந்தார். அதையே நான் குறைதான் சொன்னேன் என்று கூறியுள்ளார்.
சன்டிவியின் நாதஸ்வரம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பரியா. தொடர்ந்து ராதிகாவுடன் வாணி ராணி, கல்யாண பரிசு, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியலிகளில் நடித்து பிரபலமான இவருக்கு சின்னத்திரையில் பல ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவரது முதல் சீரியலான நாதஸ்வரம் இவருக்கு பலரின் பாராட்டுக்களை பெற்று தந்தது.
சின்னத்திரை மட்டுமல்லாமல் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ள ஸ்ருதி ஷண்முகப்பிரியா, 2022-ம் ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 2022 மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் 2-வது இடம் பிடித்திருந்த இவர், திருமணமாகி ஒரு வருடத்தில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அதன்பிறகு அவரின் ஆன்மாவுடன் தான் பேசிக்கொண்டு இருப்பதாகவும்,அதுதான் தன்னை பாதுகாப்பதாகவும் ஸ்ருதி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, தற்போது டெலி விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நான் ஸ்கூல் முடித்தவுடன் 17 வயதில் நடிக்க வந்துவிட்டேன். நாதஸ்வரம் சீரியல் தான் எனக்கு அடையாளம் கொடுத்தது. நான் நடிப்பில் இறங்கிவிட்டாலும், படிப்பு ரொம்ப முக்கியம் படித்துக்கொண்டே நடி என்று வீட்டில் சொன்னார்கள். அதன்படி நடித்தக்கொண்டே படித்தேன்.இப்போது நான் ஒரு யூஜி, 2 பி.ஜி என 3 டிகிரி முடித்துள்ளேன். நான் எங்கு சென்றாலும் நாதஸ்வரம் சீரியலில் வரும் என் கேரக்டரை வைத்து தான் அழைப்பார்கள்.
அந்த சீரியலில் எனக்கு, 4 சகோதரிகள், நான் 4 பேருமே இப்போதும் தொடர்பில் தான் இருக்கிறோம். அதே சமயம் என் வாழ்க்கையில் எல்லாமே அரவிந்த் தான். இப்போது அவன் இல்லை என்றாலும், நான் நண்பர்களுடன் பேசும் போது அரவிந்த் பற்றி கண்டிப்பாக பேசுவோம். நாங்கள் நினைக்க நினைக்க அரவிந்த் எங்களுடன் தான் இருக்கிறான். அவன் இப்போது இல்லை என்றாலும், நினைவுகள் என்றும் மாறாது. எங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் அரவிந்த் என் கண்னை டாட்டூ போட்டார்.
அவருக்கு ஊசி என்றால் பயம், ஆனால் எனக்காக என் கண்னை முதல் முறையாக அவர் கையில் டாட்டூ போட்டார். அப்போது அதை பார்த்து எனக்கு சந்தோஷமாக இருந்தது ஒரு பக்கம் என்றாலும், என் கண்ணில் 2 மச்சம் இருக்கிறது. இது இந்த டாட்டூவில் இல்லை. அப்படி என்றால் இது என் கண் என்று எப்படி தெரியும், நீ போய் அந்த மச்சத்தை போட்டு வா என்று சொன்னேன். இவ்வளவு பண்ணிருக்கேன், எனக்கு அந்த மச்சம் தான் முக்கியமாக என்று கேட்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள்.
அரவிந்த் இப்போது இல்லை என்றாலும், நான் அவர் வீட்டில் தான் இருக்கிறேன். மாமனார் – மாமியார் இருவருமே என்னை அரவிந்த் இடத்தில் தான் பார்க்கிறார்கள். நான் கோயம்புத்தூர். ஆனால் என் அப்பா அம்மா எனக்காக சென்னையில் தங்கியிருக்கிறார்கள். வாரத்தில் 5 நாட்கள், மாமனார் வீ்ட்டிலும், 2 நாட்கள் என் அப்பா அம்மாவுடனும் இருக்கிறேன் என்று ஸ்ருதி சண்முகப்பிரியா கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.