scorecardresearch

தோழிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகை சுஜிதா… எவ்வளவு ஜாலி பாருங்க…!

Tamil Serial Update :பண்டிகை காலங்களில் ஸ்பெஷல் வீடியோ வெளியிடுவது சுஜிதா தனுஷின் வழக்கமான பணிகளில் ஒன்று

Tamil Serial Actress Sujitha Dhanush Viral Video : தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் சுஜிதா தனுஷ். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இவர், நடிப்பு மட்டுமல்லாது, விளம்பர பட இயக்கம் உள்ளிட்ட பல வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா தனுஷ் அவ்வப்போது சுவாரஸ்யமாக வீடியோ மற்றும் புகைப்படங்கள், குடும்பத்தினருடன் அவுட்டிங் செல்வது தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். மேலும் பண்டிகை காலங்களில் ஸ்பெஷல் வீடியோ வெளியிடுவது சுஜிதா தனுஷின் வழக்கமான பணிகளில் ஒன்று.

அந்த வகையில் சமீபத்தில் ஹோலிப்பண்டிகையை முன்னிட்டு இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் சுஜிதா தற்போது தனது ஹோலி கொண்டாட்டத்தை தெலுங்கு நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார்.

இந்த வீடியோவின் தொடக்கத்தில் தனது தோழியின் வீட்டு கதவை தட்டும் சுஜிதா, கதவு திறப்பதற்கு முன் ஒளிந்துகொள்கிறார். சில வினாடிகளில் கதவு திறந்தவுடன் சுஜிதா தனது தோழியை பயமுறுத்துவது போன்று வீடியோ தொடங்குகிறது. அதன்பிறகு தனது சக நடிகரும் நண்பருமான ஒருவரை பற்றி பேசுகிறார். அதற்கு அவர் தன்னைப்பற்றி புழ்ந்து பேசுமாறு கூறுகிறார்.

இப்படி ஜாலியாக சென்று கொண்டிருக்கும் இந்த வீடியோ ஒரு கட்டத்தில் செம்ம ஜாலியாக மாறி இருவரை ஒருவர் கலர் பொடியை எடுத்து பூசிக்கொள்கின்றனர். இடையில் நாயகன் படத்தில் வரும் அந்தி மழை மேகம் என்ற பாடலுடன் இந்த வீடியோ நிறைவு பெறுகிறது. சுமார் 1 நிமிடம்20 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை 1.13 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், சுஜிதாவின் ஹோலி கொண்டாட்டம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.    

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress sujitha dhanush special holy celebration video