Tamil Serial Update : வெள்ளித்திரையை விட சின்னத்திரை சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில இருந்து மக்கள் பெரும்பாலானோர் சீரியலுக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர். இதனால் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கும் அதிகரித்து வரும் நிலையில், அடிக்கடி புதிய சீரியல்களும் களமிறங்கி வருகின்றனர்.
சீரியல் மட்டுமல்லாது அதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் பெரும்பாலான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கமான ஒன்று. மேலும் அவர்களின் சமூகவலைதள பக்கங்களை ஃபாலோ செய்யும் ஃபாலோயர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக சின்னத்திரை நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மட்டுமல்லாது சில விளம்பரங்களையும், பதிவிட்டு வருகினறனர். அப்படி இவர்கள் பதிவிடும் விளம்பரங்கள் மக்கள் மத்தியிலர் நல்ல ரீச் கிடைத்து அந்த பொருட்களில் விற்பனையும் அதிகரித்து வருகிறது. சீரியலில் வாங்கும் சம்பளத்தை விட பல சீரியல் நடிகைகள் சமூக வலைதளங்களில் அதிகம் சம்பாதித்து வருகினறனர்.
அந்த வகையில் யூடியூப் சேனல் மூலம் விளம்பங்களை பதிவிடும் சீரியல் நட்சத்திரங்கள் சிலரை பார்க்கலாம் :
சுஜிதா தனுஷ் :
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில திரைப்பங்களில் நடித்துள்ளவர் சுஜிதா தனுஷ். விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழின் உச்சத்தில் உள்ள இவர், கதைகேளு கதைகேளு என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் தற்போது வரை 5.12 லட்சம் சப்ஸ்கிரைபரை வைத்துள்ள சுஜிதா, இதில் அழகு சாதனங்கள் தொடர்பான விளம்பரங்களை பதிவிட்டு வருகிறார். மேலும் சமையல் குறிப்புகள் தான் செய்யும் வித்தியாசமான செயல்கள் உள்ளிட்ட பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
ஹேமா ராஜ்குமார்:
விஜய் டிவியின் அதே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற ரோலில் நடித்து புகழ்பெற்றவர் ஹேமா ராஜ்குமார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், ஹேமாஸ் டைரி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் தற்போது 7.05 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸை வைத்துள்ள ஹேமா சமையல் மற்றும் அழகு சாதனங்கள் தொடர்பான விளம்பரங்களை பதிவிட்டு வருகிறார். இவரின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
வனிதா விஜயகுமார்
இவர் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் வைரலான நடிகையாக வலம் வருகிறார். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றுள்ளார். வனிதா விஜயகுமார் என்று தனது பெயரிலேயே யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர், தற்போதுவரை 7.38 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸை வைத்துள்ளார். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இவர், தனது யூடியூப் சேனலில் சமையில் மற்றும் பேஷன் டிசைன் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
ரித்திகா தமிழ்ச்செல்வி :
விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றுள்ள நடிகை ரித்திகா தமிழ்செல்வி தனது பெயரிலேயே ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். தற்போதுவரை சுமார் 1 லட்சம் சப்ஸ்கரைப்பர்களை வைத்துள்ள இவர், குழந்தைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அவ்வப்போது சமையல் தொடர்பாக வீடியோக்களையும் பதிவிடுகிறார்.
சிவாங்கி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்சியின் மூலம் புகழ்பெற்ற சிவாங்கி, தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமடைந்தார். தற்போது சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் இவர் சிவாங்கி கிருஷ்ணக்குமார் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். தற்போதுவரை 1.69 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை வைத்துள்ள சிவாங்கி, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
நக்ஷத்ரா நாகேஷ்
விஜய் டிவியின் தமிழும் சரஸ்வரியும் சீரியலில் நடித்து வரும் இவர், தனது கியூட்டான நடிப்பின் மூலம் குறுகிய காலத்தில் தமிழ் சின்னத்திரையல் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். தனது பெயரிலேயே யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நக்ஷத்ரா நாகேஷ், தற்போதுவரை 2.51 லட்சம் சப்ஸ்கரைபர்களை வைத்துள்ளார். இதில் அவர், சமையல் மற்றும் பியூட்டி டிப்ஸ் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவர்கள் மட்டுமல்லாது மேலும் பல நட்சத்திரங்களும் யூடியூப் சேனல் நடத்தி வருகினறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “