Advertisment

காட்டுக்கே ராணியான ஒரு ஃபீல்... வித்யா பிரதீப் ஃபாரஸ்ட் க்ளிக்ஸ்

தனுஷின் மாரி படத்தில் கிருஷ்ணாவின் மனைவியாக நடித்திருந்த வித்யா பிரதீப், அருண்விஜய் நடிப்பில் பெரும் வெற்றிப்படமாக அமைந்த தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Vidhya Pradeep

நடிகை வித்யா பிரதீப்

கடந்த 2010-ம் ஆண்டு தமிழில் வெளியான அவள் பெயர் தமிழரசி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் வித்யா பிரதீப். கேரளாவை சேர்ந்த இவர் அடுத்து விருந்தாளி என்ற படத்தில் நடித்திருந்தார்.

Advertisment
publive-image

இந்த 2 படங்களுமே அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன்பிறகு தமிழில் சைவம், அதிபர், அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

publive-image

மேலும் தனுஷின் மாரி படத்தில் கிருஷ்ணாவின் மனைவியாக நடித்திருந்த வித்யா பிரதீப், அருண்விஜய் நடிப்பில் பெரும் வெற்றிப்படமாக அமைந்த தடம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

publive-image

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான தலைவி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த வித்யா பிரதீப், சித்திரை செவ்வானம், எண்ணி துணிக, டி3, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

publive-image

தற்போது யாதும் ஊரே யாவரும் கேளீர், இன்பினிட்டி, எகோ, கண்ணகி அசுரகுளம், ஸ்ரிக்கர், தி புக் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

publive-image

மேலும் சின்னத்திரையில் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய நாயகி சீரியலின் லீடு ரோலில் நடித்திருந்த வித்யா பிரதீப், ஐ ஹேட், ஐ லவ் யூ என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் வித்யா பிரதீப் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

publive-image

அந்த வகையில் தற்போது வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள வித்யா பிரதீப் காடுகளில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment