Advertisment

ராதிகாவுக்கு ப்ரமோஷன்; டபுள் சம்பளம்: ஆனா கோபி முகத்தில் சந்தோஷம் இல்லையே!

சந்தோமாக இருந்த கோபி சம்பள விஷயத்தை சொன்னதும் ஷாக் ஆகிவிடுகிறார். அதன்பிறகு மனதிற்குள் ஏதோ நினைத்துக்கொண்டு கோபி நிற்கிறார்

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல்

ராதிகாவுக்கு ப்ரமோஷன் கிடைச்சாசு சம்பளமும் டபுள் ஆச்சு ஆனா கோபி ஏன் சந்தோஷமே இல்லாமல் இருக்காரு என கேட்கும் அளவுக்கு விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. தனது மனைவி ராதிகாவுடன் தன் வீட்டில் வந்து குடியேறிய கோபி, ராதிகாவின் பேச்சை கேட்டு குடும்பத்தினருடன் சண்டை போட்ட நிலையில், ஈஸ்வரியை ராதிகா வெளியே போக சொன்னது பரபரப்பின் உச்சமாக இருந்தது. அதன்பிறகு ஒரு மாதத்தில் 18 லட்சம் பணத்தை கொடுத்து இந்த வீட்டை வாங்குகிறேன் என்று சவால் விட்டார் பாக்யா.

அதேபோல் 3 நாட்கள் சமையல் ஆர்டர் செய்து,  எழில் மற்றும் செழியன் ஆகியோரின் உதவியுடன் கோபிக்கு பணம் கொடுத்த பாக்யா, ராதிகாவையும் கோபியையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். தொடர்ந்து வீட்டை தனது பெயருக்கு எழுதி வாங்கிய பாக்யா வீட்டில் பெயரை பாக்கியலட்சுமி இல்லம் என்று மாற்றி கோபிக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தார். அதேபோல் இந்த கோபத்தை ராதிகா பாக்யாவிடம் கேட்டீனில் காட்டிவிட்டார்.

இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது ஒரு ப்ரமோ என்று வெளியாகியுள்ளது. இதில் வீட்டிற்கு ஸ்வீட்டுடன் வரும் ராதிகா, எனக்கு ப்ரமோஷன் கிடைத்துவிட்டது என்று சொல்ல ராதிகாவின் மகள் மயூ அவரது அம்மா, கோபி என அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். அதன்பிறகு இனிமேல் பெங்களூர் ப்ராஞ்ச்க்கும் நான் தான் எச்.ஆர் என்று சொல்லும் ராதிகா சம்பளம் டபுள் மடங்கு என்று கூறுகிறார்.

அதுவரை சந்தோமாக இருந்த கோபி சம்பள விஷயத்தை சொன்னதும் ஷாக் ஆகிவிடுகிறார். அதன்பிறகு மனதிற்குள் ஏதோ நினைத்துக்கொண்டு கோபி நிற்க சம்ளபத்தை அப்படியே செலவு செய்துவிடாமல் மயூ பெயரில் போட்டு வை என்று ராதிகாவின் அம்மா சொல்கிறார். அதன்பிறகு அனைவரும் சாப்பிட செல்கின்றனர். அப்போது கோபி எனக்கு வெளியில் சின்ன வேலை இருக்கு என்று சொல்ல, குடிக்க போறீங்களா என்று ராதிகா கேட்கிறார். அதற்கு கோபி என் அத்தை இருக்காங்க இப்போ எப்படி குடிப்பேன் சத்தியமா ஆபீஸ் வேலை தான் என்று சொல்லிவிட்டு போகிறார் கோபி. ராதிகா அதிக சம்பளம் வாங்குவது கோபிக்கு பொறாமையோ என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment