/tamil-ie/media/media_files/uploads/2022/09/Baakiyalakshmi-1.jpg)
அப்பா திருமணத்திற்கு வருவாரா மகள்? இனியா யார் பக்கம்? பரபரப்பாகும் பாக்யலட்சுமி
ஈஸ்வரி தான் சொன்னபடி திருமணத்தை நிறுத்திவிட்டால் கோபி தனது அம்மாவை எப்படி எதிர்கொள்வார்,
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Baakiyalakshmi-1.jpg)
Advertisment
விஜய் டிவியில் தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் பாக்கியலட்சுமி. விவாகரத்தான கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம், மனைவி மகன் போனாலும் மகள் மீது பாசத்துடன் இருக்கும் அப்பா, இந்த வயதில் மகன் இப்படி ஒரு காரியத்தை செய்கிறானே என்று வயதான அப்பா அம்மா இதில் யார் நினைப்பது நடக்கும் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோபி, பாக்யா ராதிகா இந்த 3 கேரக்டர்கள் தான் இந்த சீரியலின் முக்கியத்தும். கணவன் மனைவியான கோபி பாக்யா இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். ஆனாலும் கோபி எப்போதும் போல் பாக்யாவை மட்டம் தட்டிக்கொண்டே இருக்கிறார். விவகரத்து பெற்றாலும தான் இந்த வீட்டில் தான் இருப்பேன் என்று கூறி கோபியை வெளியில் தள்ளிய பாக்யாவுக்கு பழையபடி ஈஸ்வரி, இனியா செழியன் என 3 பேரும் வில்லன்களாக மாறிவிட்டனர்.
இதனிடையே தனது அம்மாவுக்கு துரோகம் செய்தாலும் பரவாயில்லை அப்பா தான் முக்கியம் என்று இனியா இரு்கிறார். அதேபோல் அப்பா வீட்டில் இருந்தவரை குடும்ப செலவுகளை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால் இப்போது அவர் வெளியில் சென்றுவிட்டாலும் நான் எப்போதும்போல என் தேவைகளை மட்டும்தான் செய்வேன் என்று அடம் பிடிக்கிறார் செழியன். அவரும் இனியா போல அப்பா தப்பே செய்தாலும் நல்லவர்.
அதேபோல் ஈஸ்வரி தன் மகன் தவறு செய்துவிட்டான் என்று தெரிந்து கோபப்பட்டாலும், அவன் வீட்டை விட்டு வெளியில் சென்றவுடன் அவன் செய்த தவறுகளை மறந்துவிட்டு அவனைப்பற்றியோ யோசனையில் இருக்கிறார். மறுபுறம் பாக்யா மீது வெறுப்பை காட்டுகிறார். இதனிடையே கோபியின் திருமண படலம் அரங்கேறுகிறது. இந்த பக்கம் பாக்யா ஒரு பெரிய சமையல் ஆர்டரை பிடிக்க முயற்சிக்கிறார்.
தற்போது இந்த இரண்டு தேவைகளும் ஒரே புள்ளியில் வந்து முடிந்துள்ளது. கோபி திருமணம் நடக்கும் அதே மண்டபத்தின் சமையல் ஆர்டரை பாக்யா பெற்றுள்ளார். ஆனால் இங்கு கோபி திருமணம் தான் நடக்கிற என்று பாக்யாவுக்கோ, திருமணத்தில் சமைப்பது பாக்யாதான் என்பது கோபிக்கோ தெரியாது. இந்த உண்மை தெரிந்தால் பாக்யா கோபி ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பது பெரிய எதிர்பார்ப்பு.
அதே சமயம் தான் ராதிகாவை திருமணம் செய்துகொள்வது குறித்து அம்மா ஈஸ்வரியிடம் சொன்ன கோபிக்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டுள்ளது. அதுவரை மகனைப்பற்றி கவலைப்பட்ட ஈஸ்வரி திருமணம் செய்தி கேட்டு கோபி இந்த கல்யாணத்தை எப்படி நடத்துரேனு பாக்குறேன்டா என்று சவால் விட்டு சென்றுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டால் இனியா அதை ஏற்றுக்கொள்வாளா? கோபி அங்கிள் மீது உயிராக இருக்கும் மயூ இனியா மீது கோபி பாசம் காட்டினால் அதை எப்படி எடுத்துக்கொள்வார்? என்று குழந்தைகள் பார்வையில் கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் விவாகரத்துக்கு பின் ராதிகா கோபியை நடு ரோட்டில் பார்த்து கோபப்பட்ட பாக்யா இந்த திருமணம் குறித்து தெரிந்தால் என்ன செய்வார்?
அதேபோல் ஈஸ்வரி தான் சொன்னபடி திருமணத்தை நிறுத்திவிட்டால் கோபி தனது அம்மாவை எப்படி எதிர்கொள்வார், பாக்யா மற்றும் அப்பா போலவே ஈஸ்வரியையும் கோபி வெறுத்துவிடுவாரா இதில் யார் நினைப்பது நடக்கும் என்பது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.