Vijay TV Baakiyalakshmi Serial Rating Update : ஒவ்வொரு வீட்லயும் மருமகள் இப்படி இருந்துட்டா அந்த வீடு சொர்க்கம் தான் என்று சொல்லும் அளவுக்கு விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் ஸ்ராங்காக இடம்பிடித்துள்ளது.
தனது மகன் தனது மருமகளை கைவிட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் சுற்றுகிறான் என்று தெரிந்து கோபப்படும் அப்பா ஒரு கட்டத்தில் பிரஷர் அதிகமாகி பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகிறார். அப்போது குற்றஉணர்ச்சியில் கூனிகுறுகும் மகன், தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வான் என்று பார்த்தால் அதுதான் இல்லை. நீங்கள் எப்படியோ இருங்கள் எனக்கு என் வாழ்க்கைதான் முக்கியம் என்பது போல அடுத்து திருமணத்திற்கு தயாராகிவிட்டான்
கோபி 3 குழந்தைகளுக்கு தகப்பன் அன்பான மனைவி அம்மா அப்பா மருமகள் என ஒரு அழகான குடும்பம் இருந்தும், தன் கல்லூரி பருவத்தில் காதலித்த ராதிகா என்பரை திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கிறான் இதற்காக ராதிகாவிடம் பல பொய்களை சொல்லி அவளை திருமணத்திற்கு தயார்படுத்தகிறான். ஏற்னவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும் ராதிகா தனது கணவரை விவாகரத்து செய்ய நீதிமன்றத்திற்கு செல்கிறாள். அதேபோல் கோபியும் அவரது மனைவி பாக்யாவை விவாரத்துசெய்ய வேண்டும் என்று சொல்கிறாள்.
அப்பா இப்படி இருக்கும்போது எப்படி என்று யோசிக்கும் கோபி, பாக்யாவிடம் நாசுக்காக பேசி கையெழுத்து வாங்கி விடுகிறார். இப்போது அதில் என்ன இருக்கிறது என்று கேட்க மாட்டாயா என்று கோபி கேட்க, நீங்கள்தான் கேட்கிறீர்கள் அதில் என்ன இருக்கப்போகிறது என்று வெள்ளந்தியாக பேசுகிறார் பாக்யா. இதை கேட்டு ஒருபக்கம் கோபி ஃபீல் பண்ணினாலும், மறுபக்கம் ராதிகாவுடனான அவனது காதல் அவன் கண்ணை மறைக்கிறது.
தற்போது ராதிகாவிடம் கையெழுத்து வாங்கிவிட்ட கோபி அடுத்து என்ன செய்யபோகிறார், ராதிகாவை திருமணம் செய்துகொள்வாரா அல்லது தனது குடும்பம்தான் முக்கியம் என்று சொல்லி ராதிகாவை விட்டுவிடுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வரும் வாரத்திற்கான பாக்யலட்சுமி ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. தனது மாமனாரை தனது அப்பா போல் பார்த்துக்கொள்ளும் பாக்யா அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். அப்போது அவர் ஏதோ சைகை காமிக்க, அவருக்கு பாத்ரூம் வருவதாக கூறி அதற்கான வேலைகளை செய்கிறார். இதை பார்த்து மாமனார் கண்கலங்க என் அப்பாவா இருந்தா இதை செய்ய மாட்டேனா என்று சொல்கிறார் பாக்யா அத்துடன் முடிகிறது ப்ரமோ.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர், மாமனார் தங்கம். பாக்கியா வைரம். சீரியலில் இது போன்ற உணர்வு பூர்வமான உறவுகளை பார்த்து வெகு காலமாகி விட்டது. நமக்கும் கண்கள் கலங்கும் நெகிழ்வான காட்சி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படி ஒரு மாமனார் மருமகள் அப்பா மகள் போலத்தான் அருமையான உறவுகள். இருவருமே நல்ல கதாபாத்திரங்கள் என்று கூறியுள்ளார். பாக்கியா சிறந்த நடிப்பு…தாத்தாவின் உணர்வுப்பூர்வமான நடிப்பு அனைவரின் மனதையும் நெகிழ்ந்து விட்டது…எனறு கூறியுள்ளார்.
இந்நிலையில்,ராதிகா விஷயத்தில் கோபி அடுத்து என்ன செய்வார் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையாகவே ஒரு அழகான குடும்பத்தின் வாழ்வியலை கண்முன் நிறுத்தும் இந்த சீரியல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் உள்ளது. பெங்காலி மொழியில் கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சௌமியே என்ற சீரியலின் ரீமேக்தான் பாக்யலட்சுமி என்றாலும் கூட தமிழ்ரசிகர்களை இந்த சீரியல் வெகுவாக கவர்ந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “