Baakiyalakshmi Serial Rating Update : தாத்தாவுக்கு பக்கவாதம் இருந்தாலும் அவரது கேரக்டருக்கு நல்ல ஸ்கோப் கொடுத்துருக்கீ்ங்க டைக்ரக்டர் சார் சூப்பர்… ஆனா என்ன பண்றது இப்போவும் ராதிகாவுக்கு உண்மை தெரியப்படுத்த மாட்டீங்களே என்று சொல்லும் அளவுக்குதான் பாக்யலட்சுமி சீரியல் உள்ளது.
திருமணத்திற்கு மீறிய உறவு கடைசியில் மன உலைச்சலைத்தான் ஏற்படுத்தும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் இந்த உறவு தொடர்பாக திரைக்கதை அமைத்து சீரியல் ஒளிபரப்பானால் அது பார்ப்பவர்களுக்கு மன உலைச்சலை ஏற்படுத்தும் என்பதற்கு சிறந்த உதாரணம் விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல்.
அழகான குடும்பம் அன்பான மனைவியை விட்டுவிட்டு முன்னாள் காதலியை திருமணம் செய்துகொள்ள நினைக்கும் கோபி இப்போது முழு நேரமும் தனது முன்னாள் காதலி ராதிகாவுடனே இருந்து வருகிறார். அவருடன் வெளியில் செல்வர் ஊர் சுற்றுவது என வாழ்க்கையை ரொம்பவே எஞ்சாய் பண்ணுகிறார். ஆனால் என்ன செய்வது இந்த விஷயம் தனது குடும்பத்திற்கு தெரிந்துவிடுமோ என்று பயந்துகொண்டு இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த வாரம் ராதிகா மற்றும் அவளது குழந்தையுடன் பிகினிக் சென்ற கோபி அங்கிருந்து அவசர அவசரமாக திரும்பிவிட்டார். அதற்கு காரணம் பாக்யா குடும்பமும் இந்த இடத்திற்கு பிகினிக் வந்துள்ளது. அங்கு கோபி அவசரமாக கிளம்புவதை அவரது மகன் எழில் பார்த்துவிடடான். ஆனால் கோபியை பிடிக்க முடியவில்லை. காரணம் கோபி இப்போது மாட்டிக்கொண்டால், சீரியலே முடிந்துவிடும்.
எந்த ரகசியமானாலும் ஓரளவுக்குதான் சொல்லாமல் கொண்டு சொல்ல முடியும். அந்த எல்லை மீறிவிட்டது என்றால், எப்படியும் சொல்லப்போறது இல்ல அதுக்கு ஏன் இவ்ளோ பில்டப் கொடுக்கீறீங்க என்று கெஸ் பண்ணம் அளவுக்கு சென்றுவிடும். இப்போது பாக்யலட்சுமி சீரியல் அந்த ஸ்டேஜில் தான் இருக்கிறது. இதற்கு முன்பு பலமுறை இதே மாதிரி கோபி தனது வீட்டில் மாட்டிக்கொள்வது போல் காண்பிடித்து ஏமாற்றியுள்ளார் இயக்குநர்.
இப்போது புதுவிதமாக ஏமாற்ற உள்ளார். அது என்ன வென்றால், எழில் பிகினிக் சென்ற இடத்தில் கோபி நடந்துகொண்டது குறித்து தாத்தாவிடம் சொல்ல, தாத்தா உடனே பாக்யாவும் கோபியும் ஒன்றாக இருக்கும் போட்டோவை எடுத்துக்கொண்டு ராதிகா வீட்டுக்கு செல்கிறார் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் கோபி மாட்டிவிடுவார் என்று ரசிகர்கள் நினைப்பதாக இந்த சீரியலின் இயக்குநர் நினைத்துக்கொண்டிருப்பார்.
ஆனால் இதற்கு முன்பு இதேபோல் ஏமார்ந்த ரசிகர்கள் இப்போது சுதாரித்துக்கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். எப்படியும்தாத்தா உண்மையை சொல்லப்போவதில்லை கோபி மாட்டப்போவதில்லை. உங்களது கதை எங்களுக்கு தெரியும் டைரக்டர் சார் வேற எதாவது முயற்சி செய்யுங்கள் என்றே கூறி வருகின்றனர். ஆனால் பக்கவாதம் வந்தது போல் நடித்து வரும் தாத்தாவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil