Tamil Serial Baakiyalakshmi Rating Update : என்ன கோபி எழில் பேச்சை கேட்டு ஷாக் ஆன மாதிரி ரியாக்ட் பண்றீங்க… இதை தானே நீங்களும் எதிர்பார்த்தீங்க அதா சொல்லிட்டாங்கே இனிமே ஜாலியா ராதிகா கூட பிக்னிக் போலாமே என்று சொல்ல வைக்கிறது பாக்யலட்சுமியின் இன்றைய எபிசோடு.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. விதவை மறுமணம் ஒருபுறம், இல்லத்தரசியின் வாழ்க்கைப்போராட்டம் ஒருபுறம் என இந்த சீியலில் சமூக கருத்துக்கள் பல இருந்தாலும், திருமணத்திற்கு மீறிய உறவு, பள்ளி மாணவியின் அலைபாயும் மனசு, என சற்று விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்லவரவேற்பு இருந்து வருகிறது. இதில் தற்போது கோபியின் இளைய மகன் எழில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ப்ரிவியூ ஷோவை பார்க்க அனைவரையும் அழைக்கிறான். தனது அப்பா கோபி பற்றிய உண்மை அனைத்தும் தெரிந்த எழில் கோபியை கூப்பிடவில்லை.
ஆனால் கணவனே கண்கண்ட் தெய்வம் என்று இருக்கும் பாக்யா அப்பாவை கூப்பிடசொல்லி எழிலிடம் சொல்கிறாள். (எவ்வளபு பட்டாலும் பாக்யா கோபி விஷயத்தில் ஒரே மாதிரிதான்.) வேண்டா வெறுப்பாக கோபி அறைக்கு செல்லும் எழில் பெரிய ட்விஸ்ட் கொடுக்கிறார். அப்பாவிடம், நான் படம் இயக்கி இருக்கேனு உங்களிடம் சொல்ல வேண்டும், நீங்கள் என் பக்கத்தில் இருக்க வேண்டும் என்றல்லாம் நான் நினைக்கவில்லை.
இது பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும் என்றும் நான் ஆசைப்படவில்லை. நாளைக்கு என் படத்தின் ப்ரிவியூ ஷோ எனக்கு பிடிச்ச எல்லாரும் இருப்பாங்க தயவு செய்து அங்க நீங்க வரவேண்டாம். எப்போமே எங்க கூட நீங்க இருக்னும்னு ஆசைபபட்ட போதெல்லாம் எதாவது ஒரு பொய் சொல்லிட்டு வேற யார் கூடயாவது போவீங்களே அதே மாதிரி இப்போவும் ஏதாவது சொல்லிட்டு உங்களுக்கு புடிச்சதை செய்ங்க…
போன வாரம் நாங்க பிக்னிக் போகும்போது கூட நீங்க இப்படித்தான் ஏதோ சொல்லிட்டு உங்களுக்கு புடிச்சதை செஞ்சீங்க என்று சொல்ல கோபி ஷாக ஆகிவிடுகிறான். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. கணவன்தான் உலகம் என்று இருந்தாலும், இதுவரை ஏன் அவர் நம்முடன் எதற்கும் வரவில்லை என்று பாக்யா யோசிக்கமாட்டாரா? அவரும் பெண்தானே அவருக்கும் கணவருடன் வெளியில் செல்ல வேண்டும் என்ற ஆசையே வராதா?
வீட்டில் உள்ளவர்களுக்கு பணிவிடை, சமையல் ஆர்டர் இதை தவிர பாக்யா யோசிச்சி புத்திசாலித்தனமா எதுவும் செய்ய மாட்டாரா என்று கேட்கத்தான் தோன்றுகிறது. விவாகரத்து கோர்ட்டுக்கு போனதுக்கே எதுக்குனு பாக்யாவுக்கு இன்னும் டவுட் வரல… இவங்க எங்க புத்திசாலித்தனமா யோசிக்கப்போறாங்… டைரக்டர் சார் பாக்யா அம்மாவா காப்பாத்துங்க…. உங்க கையலதான் இருக்கு
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil