scorecardresearch

நம்ம கல்யாணத்தில் அவங்களும் இருக்கணும்… கோபி தலையில் இடியை இறக்கிய ராதிகா!

Tamil Serial Rating : கோபி ராதிகா கல்யாணத்திற்கு பாக்யாவே தாலி எடுத்து கொடுப்பார் அப்போது உண்மை தெரிந்தால் ராதிகாதான் ஷாக் ஆவார்

நம்ம கல்யாணத்தில் அவங்களும் இருக்கணும்… கோபி தலையில் இடியை இறக்கிய ராதிகா!

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. கணவன் மனைவிக்கு இடையே உறவு எப்படி இருக்க கூடாது என்பதற்கு இந்த சீரியல் ஒரு சிறந்த உதாரணம். சீரியலின் மெயின் கேரக்டர் பாக்யலட்சுமி, கணவருக்கு பணிவிடை செய்வது வீட்டில் உள்ளவர்களை பார்த்துக்கொள்வது சமையல் பிஸினஸ் என ஓடிக்கொண்டிருக்கிறார்.

மறுபுறம் அவரது கணவர் கோபி முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்துகொள்வேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார். அதற்காக முயற்சியிலும் தீவிரமாக இறங்கியுள்ளார். வீட்டை எடுத்தக்கொண்டால் பாக்யாவின் மூத்த மகன் சுயநலவாதி, அவன் மனைவி பாக்யாவுக்கு சப்போர்ட்.

இந்த பக்கம் பார்த்தால் கடைக்குட்டி இனியா டீன்ஏஜ் வயதில் என்ன செய்ய தோன்றுமோ அதை அச்சு பிசங்காமல் சரியாக செய்து வருகிறார். இதனிடையே அவருக்கு ஸ்டைலிஷ் அம்மா வேண்டும் என்று அப்பா கோபியை வேறறொரு திருமணம் செய்துகொள்ள சம்மதம் சொல்கிறாள். இவருக்கு அம்மா பாசம் என்றால் என்ன என்று இயக்குனர் சொல்லி தரவில்லை போல.

மற்றபடி பார்த்தால் பாக்யாவின் இளைமகன் எழில், மாமனார், மாமியார் அனைவரும் பாக்யா பக்கம் நின்றாலும், ஒன்றும் தெரியாத அப்ரானியாக பாக்யா ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்து வருகிறார். கணவர் சொல்வதே வேத வாக்கு என்று நினைக்கும் பாக்யாவின் கேரக்டரை கோபி நன்கு பயன்படுத்திக்கொண்டு வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கோபி ராதிகா கல்யாணத்திற்கு பாக்யாவே தாலி எடுத்து கொடுப்பார் அப்போது உண்மை தெரிந்தால் ராதிகாதான் ஷாக் ஆவார் அந்த அளவிற்கு நமது கணவர் நமக்கு துரோகம் செய்ய மாட்டார் என்று நம்பக்கூடியவர். அதற்காக இப்படி சொல்வதை எல்லாம் நம்பிக்கொண்டிருந்தால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இதனிடையே தற்போது பாக்யா மீடியா முன்னிலையில், ஒரு மணி நேரத்தில் 100 வகையான சமையல் செய்து அசத்தியுள்ளார். இது பற்றி பேசிக்கொண்டிருக்கும் ராதிகா நமது கல்யாணத்தில் பாக்யாவும் அவரது குடும்பமும் இருக்க வேண்டும் என்று கோபயிடம் சொல்கிறாள். இதை கேட்டு ஷாக்காகும் கோபி பாக்யாவிடம் ராதிகா இவ்வளவு அன்பா இருக்கிறாளே பாக்யா எனது மனைவி என்று தெரிந்தால் என்னாகும் என்று யோசிக்கிறார் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது

இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ராதிகா: நம்ம கல்யாணத்துல அவங்களும் கூட இருக்கணும்… கோபி மைண்ட் வாய்ஸ்: என் கல்யாணத்துல கூட இருந்ததே அவ தான்டி, என் சிப்சு..என்றும், கோபி இன்னும் நிறைய சீரியல் , படங்களில் நடிக்க வேண்டும் . இவருக்கு நல்ல நடிப்புத்திறமை இருக்கு கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial baakiyalakshmi rating update with promo in tamil

Best of Express