Advertisment

பாரதிக்கே அட்மினாக வந்த கண்ணம்மா... அடுத்த ட்விஸ்ட் ரெடி

Tamil Serial Update : இட்லிக்கு மாவு அரைத்து கொடுத்து வந்த கண்ணம்மா தற்போது புதிய வேலையில் சேர்ந்துள்ளார்.

author-image
D. Elayaraja
New Update
பாரதிக்கே அட்மினாக வந்த கண்ணம்மா... அடுத்த ட்விஸ்ட் ரெடி

Tamil Serial Promo Bharathi Kannamma Update : விஜய் டிவியின் ரசிகர்கள் மனதை கவர்ந்த சீரியல் பாரதி கண்ணம்மா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியல் சமீபகாலமாக சற்று விறுவிறுப்பு குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் சீரியலுக்கு உண்டான ரசிகர்கள் பட்டாளம் குறையாமல் அப்படியேதான் உள்ளது.

Advertisment

இதில் சமீபத்திய எபிசோடுகளில் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே நெருக்கம் அதிகரிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சீரியல் சற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், தற்போது யாரும் எதிர்பாராத விதமாக பாரதி கண்ணம்மா சீரியலில் பெரிய ட்விஸ்ட் வந்துள்ளது.

பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் எப்போது தான் ஒன்று சேர்வார்கள் என ரசிகர்கள் தொடர்நது எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில். தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் வெளியகியுள்ளது. மாவு அரைத்து கொடுத்து வந்த கண்ணம்மா தற்போது புதிய வேலையில் சேர்ந்துள்ளார்.

பாரதி சீப்-சர்ஜியனாக பணியாற்ற உள்ள ஹாஸ்பிடல் ஓபன் செய்ய பாரதி வந்துள்ளார். அப்போது ஓபன் செய்ய ரிமோட் கேட்கும் போது அங்கிருக்கும் பணியாளர்கள் ரிமோட் எங்கே என்று தெரியவில்லை என்று சொல்ல அப்போது கண்ணம்மா எண்ட்ரி கொடுக்கிறார். ரிமோட் என்னிடம் இருக்கிறது என்று சொல்லி கொடுக்கிறார்.

அப்போது கண்ணம்மாவை பார்க்கும் பாரதி, நான் சீப்-சர்ஜியனாக இருக்க ஹாஸ்பிட்டல்ல இவ அட்மின் ஆபிஸராக என்று ஷாக் ஆகி இருக்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. தற்போது இந்த ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vijay Tv Bharathi Kannamma Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment