Bharathi Kannamma Serial Rating Udpate : எப்பா… வாயா மாயாண்டி துர்கா இல்லாத குறையை நீதான்யா தீர்த்து வைக்கிற என்று பாராட்டும் அளவுக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவை வெறுப்பேற்றுகிறார் புதிய வில்லன் மாயாண்டி.
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு பக்கம் லட்சுமி தனது அப்பா யார் என்று தேடிக்கொண்டிருக்க, ஹேமா தனது அப்பா பாரதிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துவிடுகிறார். இதற்கிடையே பாரதிதான் லட்சுமியின் அப்பா என்று எப்படி சொல்வது என யோசித்துக்கொண்டிருக்கிறார் கண்ணம்மா.
பாரதி கண்ணம்மா சீரியலின் மொத்த பிரச்சினைக்கும் காரணமாக வெண்பாவுக்கே டஃப் கொடுத்தவர்தான் துர்கா.. அடிக்கடி வெண்பாவுக்கு தாலி கட்டுகிறேன் என்று கூறி டார்சர் செய்வது என அடிக்கடி தொல்லை கொடுத்து வருகிறார். முழுதாக வராமல், திடீரென தோன்றி வெண்பாவுக்கு தொல்லை கொடுக்கும் துர்கா தற்போது ஆளையே காணவில்லை. ஆனால் வெண்பாவின் வெறுப்பாளர்கள் துர்காவை வலைவீசி தேடி வருகினறனர்
ஆனால் துர்கா இடத்தை நிரப்புவதற்காக தற்போது மாயாண்டி என்ட்ரி கொடுத்துள்ளார். தொடக்கத்தில் வெண்பாவுக்கு ஆதரவான செயலில் ஈடுபட்டு வந்த மாயாண்டி தற்போது வெண்பா குறித்து வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு அவளை மிரட்டி வைத்து வருகிறார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று வெண்பா திக்குமுக்காடி நிற்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதில் நேற்றைய எபிசோட்டில், தனக்கு 50 ஆயிரம் பணம் வேண்டும் மாயாண்டி வெண்பாவிடம கேட்க, அவள் தரமுடியாது என்று சொல்கிறான். உடனே மாயாண்டி தன்னிடம் இருக்கும் வீடியோவை அனுப்பிட இந்த வீடியோவை பார்த்து பதறிப்போய் வெண்பா பணம் கொடுக்க சம்மதிக்கிறாள். ஆனால் பணத்தை கொடுக்கும் போது சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுக்கிறாள். ஆனால் இதை கண்டுகொண்ட மாயாண்டி வெண்பாவின் அசிஸ்டெண்ட்க்கு ஊட்டிவடுகிறார்.
இதனால் அவர் மயக்கமடைந்துவிட, அவ வில்லினா நீ கேடி என்று மாயாண்டி சொல்கிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. பாரதியை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் வெண்பாவையே தன் கட்டுக்குள் வைத்திருக்க மாயாண்டி முயற்சிக்கிறார். இதனால் ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தினாலும் மாயாண்டி கேரக்டரை சீக்கிரம் முடித்துவிடுவார்களே என்று யோசிக்க தோன்றுகிறது ஆனாலும் இப்போதைக்கு பாரதி கண்ணம்மா ரசிகர்களக்கு குஷிதான்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil