Advertisment

பாரதிக்கு செக் வைக்க தயாராகும் கண்ணம்மா... உண்மை வெளி வருமா?

Tamil Serial Update : தற்போது ஃபரீனா ஆசாத் திரும்ப வந்திருந்தாலும், சீரியலில் பழையடி விறுவிறுப்பு குறைந்துள்ளது என்று ரசிகர்களின் கூறி வருகின்றன.

author-image
D. Elayaraja
New Update
பாரதிக்கு செக் வைக்க தயாராகும் கண்ணம்மா... உண்மை வெளி வருமா?

Tamil Serial Bharathi Kannamma Rating Update With Promo : என்னதான் நாள் சொந்த காலில் நிற்கிறேன் என்று கண்ணம்மா சொன்னாலும், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பாரதியிடம் போய் நின்றுக்கொண்டுதான் இருக்கிறார். எப்போதான் விறுவிறுப்பாக போகும்? என்று கேள்விகள் பல... இதற்கு பதில் எப்போ கிடைக்கும் என்று ரசிகர்கள் கேட்டு வருகினறனர்

Advertisment

ஒன்னு சொல்புத்தி இருக்கனும், இல்ல சுய புத்தி இருக்கனும் இரு ரெண்டுமே இல்லாமல அடுத்தவங்க சொல்றத எல்லாம் நம்பிக்கிட்டு இருந்த நம்மா வாழக்கை நரகமாத்தான் போகும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் பாரதி கண்ணம்மா சீரியல். விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதே சமயம் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.

கணவன் தன் கர்ப்பத்தின் மீது சந்தேகப்பட்டுவிட்டாரே என்று வீட்டை விட்டு வெளியேறும் கண்ணம்மா 8 வருடங்களுக்கு பிறகு தனது கணவர் குடும்பத்தை சந்திக்கிறாள். இதற்கிடையே அவளுக்கு ரெட்டை குழந்தை பிறந்து அதில் ஒன்று கணவர் பாரதி வீட்டிலும் மற்றொரு குழந்தை கண்ணம்மாவிடமும் வளர்கிறது. ஒரு கட்டத்தில் தனதுக்கு பிறந்தது இரட்டை குழந்தை என்று தெரிந்துகொள்ளும் கண்ணம்மாவுக்கு பாரதியிடம் வளரும் குழந்தை தன்னுடையது என்று தெரிந்துகொள்கிறாள்.

ஆனால் தற்போதுபோதுவரைஇந்த உண்மை அவளது மாமியாருக்கு மட்டுமே தெரியும். இந்த நிலையில். தனது அப்பா யார் என்று கேட்டுக்கொண்டிருக்கும் மகளுக்கு தனது பிறந்த நாளில் அப்பா யார் என்று சொல்கிறேன் என்று செல்லிவிடுகிறாள். இதை கேள்விப்பட்ட பாரதி எப்படியும் தன்னைத்தான் அந்த குழந்தைக்கு அப்பா என்று சொல்லப்போகிறாள் என்று கண்டுபிடித்து விடுகிறான். இதற்கு மேல் ட்விஸ்ட் என்ன இருக்கப்போகிறது என்று யோசிக்கலாம்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் கண்ணம்மா புதிய ட்விஸ்டை கையில் எடுத்துள்ளார். பிறந்த நாளில் மாமனார் மாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்கும், கண்ணம்மா அடுத்து பாரதியை தேடி ஹாஸ்பிட்டலுக்கு செல்கிறார். அப்போது வெண்பா இங்க எதுக்கு வந்த என்று கேட்க, புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஆயிரம் இருக்கும் என்று சொல்லி உள்ளே செல்கிறாள். அங்கு பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வருமாறு பாரதியிடம் கேட்க அவன் நான் எதற்கு வரவேண்டும் என்று சொல்கிறான்.

அதற்கு முக்கியமான ரகசியம் உங்களிடம் சொல்லப்போகிறேன் என்று சொல்ல அவன் என்ன ரகசியம் என்று கேட்கிறான அப்போது கண்ணம்மா ஹெமாவும் நம்ம பொண்ணுதான் என்ற ரகசியம் என்று மனதிற்குள் நினைக்க அத்துடன் முடிகிறது இந்த ப்ரமோ. தொடக்கத்தில் மந்தமாக சென்ற இந்த சீரியல் சமீபத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் பல உண்மைகள் வெளிவந்து டிஆர்பி ரேட்டிங்கில் பட்டையை கிளப்பியது.

நடுவில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்பிரியன் சீரியலை விட்டு விலகியது, பிரசவம் காரணமாக வெண்பாவாக நடித்து வந்த ஃபரீனா ஆசாத் விலகியது போன்ற காரணஙகளால், சீரியல் மந்தமானது. ஆனால் தற்போது ஃபரீனா ஆசாத் திரும்ப வந்திருந்தாலும், சீரியலில் பழையடி விறுவிறுப்பு குறைந்துள்ளது என்று ரசிகர்களின் கூறி வருகின்றன. அதிலும் இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர் ஒருவர் இந்த சீரியல் முடியும் போது நாம் சொர்கத்தில் இருப்போம் என்று என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த சீரியலில் மட்டும் தான் அனைவரும் மனதிற்குள் உண்மையை சொல்லிக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும், கடுமையாக விமர்சனஙகளை முன்வைத்துள்ள நிலையில், பாரதி கண்ணம்மா எங்களது பேவரெட் சீரியல் அதில் என்ன நடந்தாலும் நாங்கள் ரசிப்போம் என்று சொல்லிக்கொள்ளும் ரசிகர்கள் கூட்டத்திற்கு இந்த சீரியல் நிச்சயம் கவரும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Bharathi Kannamma Serial Vijay Tv Serial 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment