Advertisment

வெண்பாவை மகளாக ஏற்றுக்கொண்ட சௌந்தர்யா... பாரதி தங்கையாக ஏற்றுக்கொள்வாரா?

Tamil Serial Update : ஹீரோ திருமணமாகி 2 குழந்தைகளுக்கு அப்பா ஆன பின்பும், மனைவியுடன் சேருவாரா அல்லது சூழ்ச்சியின் உச்சமான வில்லியை திருமணம் செய்துகொள்வாரா என்று கதை நகர்ந்தால் அது சீரியல்

author-image
D. Elayaraja
New Update
Bharathi Kannamma

Tamil Serial Bharathi Kannamma Rating Update : செம்ம மேடம்.. வெண்பா இதுவரைக்கும் செஞ்சதுக்கு எல்லாம் சேர்த்து அவங்கள வச்சி செய்றீங்களே... அதும் இல்லாம வந்த கொஞ்ச நாள்ளயே எல்லாத்தையும் கண்டுபுடிச்சிட்டீங்களே கிரேட் மேடம்... என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு பாரதி கண்ணம்மா சீரியல படுவேகமாக சென்றுகொண்டிருந்தாலும், ஒரு பரபரப்போ விறுவிறுப்போ இல்லாமல் தான் உள்ளது.

Advertisment

விஜய் டிவியின் ப்ரைம்டைம் சீரியல் பாரதி கண்ணம்மா. கணவன் மனைவி எப்படி இருக்க கூடாது என்பதற்கும் அடுத்தவர் பேச்சை கேட்டு நடந்தால் இப்படித்தான் இருக்கும் என்பதற்கும் சிறந்த உதாரணம்தான் இந்த சீரியல். தொடக்கத்தில் சுமாரான வரவேற்பை பெற்ற இந்த சீரயல் கண்ணம்மாவின் நடை பயணத்தால் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்றுமுதல் இந்த சீரியலுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருந்தாலும் சமீப காலமாக பாரதி கண்ணம்மாவின் பரம ரசிகர்களை குற்றம் சொல்லும் அளவுக்குதான் இந்த சீரியல் உள்ளது. முக்கோண காதல் கதைதான் என்றாலும் கூட ஹீரோ யாரை திருமணம் செய்துகொள்வார் என்று கதை நகர்ந்தால் அது சினிமா.

ஆனால் ஹீரோ திருமணமாகி 2 குழந்தைகளுக்கு அப்பா ஆன பின்பும், மனைவியுடன் சேருவாரா அல்லது சூழ்ச்சியின் உச்சமான வில்லியை திருமணம் செய்துகொள்வாரா என்று கதை நகர்ந்தால் அது சீரியல் தற்போது பாரதி கண்ணம்மா இந்த முறையில் தான் நகர்ந்துகொண்டிருக்கிறது. ஆனா என்ன பாரதியும் கண்ணம்மாவும் வெண்பா செய்த சூழ்ச்சி பற்றிய உண்மையை தெரிந்துகொள்ள முயற்சிக்கவே இல்லை.

Advertisment
Advertisement

இவர்களுக்கு இடையில் இனி என்ன நடக்கும் என்ற பரபரப்பை ஏற்படுத்துவதை விட்டுவிட்ட இயக்குநர் கதையை தற்போது வேறு பாதையில் நகர்த்திக்கொண்டு செல்கிறார். சமீப காலமாக பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக இருக்கும் காட்சிகள் அதிகமாக உள்ளது. ஆனால் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும்படியான காட்சிகளே இல்லையே. இயக்குநரே கதையை எப்படி எடுத்து செல்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார் போல...

இது ஒருபுறம் இருக்க இதுவரை கண்ணம்மா பாரதிக்கு தனது சூழ்ச்சியால் தொல்லை கொடுத்து வந்த வெண்பாவுக்கு பதில் அவரது அம்மா ரூபத்தில் வந்துள்ளது. பாரதியை மறந்துவிட்டு அம்மா சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள் என்று அவர் வற்புறுத்த அவரது பேச்சை தட்ட முடியாத நிலையில் வெண்பா சிக்கிக்கொண்டார். தற்போதைக்கு இதுமட்டுமே இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஆறுதலான விஷயம். மற்றபடி பாரதியும் கண்ண்மமாவுமத் ஒன்று சேர்வார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது காணல் நீராகத்தான் போகும் என்பது இயக்குநரின் தீர்ப்பு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijaytv Serial Bharathi Kannamma Serial Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment