Tamil Serial Bharathi Kannamma Rating Update : கண்ணம்மாவை பிடிக்காது ஆனால் அவள் பெற்ற மகள் லட்சுமியை மட்டும் மிகவும் பிடிக்கும் இது என்ன சார் நியாயம் என்று கேட்டுகும் அளவுக்கு செண்டிமென்டில் பின்னி பெடலெடுக்கிறார் டாக்டர் பாரதி.
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற கூற்றை தவறுதலாக புரிந்துகொண்டதற்கு எடுத்துக்காட்டுதான் டாக்டர் பாரதி. தோழியின் பேச்சை கேட்டு மனைவியை இவர் உண்மை என்ன என்பதை கூட தெரிந்துகொள்ள முயலவில்லை.
இது இப்படி இருக்க தனது மகள்தான் என்று தெரியாமல் ஹேமாவுடன் பாசத்தை பொழியும் பாரதி, அவளின் தோழியான லட்சுமியிடமும் பாசமழை பொழிகிறார். இதில் இருவருமே தனது மகள்தான் என்பதை தெரிந்துகொள்ளாத அவர், லட்சுமி கண்ணம்மாவின் மகள் என்பதை தெரிந்துகொள்கிறார். ஆனாலும் அவளை பாரதி அன்பாக பார்த்துக்கொள்கிறான்.
இதனிடையே தனது பிறந்த நாளில் லட்சுமியின் அம்மா அப்பா எல்லாமே கண்ணம்மாமான் இனி அப்பா யார் என்று கேட்க கூடாது என்று பாரதி சொல்ல இப்போது லட்சுமி தனது அப்பா யார் என்று கேட்காமல் இருக்கிறாள். இதற்கிடையே ஹேமாவும் பாரதியும் காரில் வரும்போது லட்சுமி குறுக்கே வருகிறாள். அவளை காப்பாற்றும் பாரதி வீட்டிற்கு அழைத்துச்சென்று கண்ணம்மாவிடம் சண்டை போடுகிறான்.
இதை கேட்கும் கண்ணம்மா இப்போதான் லட்சுமிக்கு பொறுப்பான அப்பாவா நடந்துகிறீங்கள் ரொம்ப சந்தோஷம் என்று சொல்கிறாள். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. கணவன் வெளியில் அனுப்பிவிட்டதால், தான் சொந்த காலில் நின்று லட்சுமியை வளர்ப்பேன் என்று சொல்லிக்கொண்ட கண்ணம்மாவுக்கு இப்போ பாரதியின் உதவி தேவைப்படுகிறது.
ஆனால் தன்னை விட்டு பிரிந்து சென்ற கண்ணம்மா தனியாத்தான் இருக்கிறாள். விவாகரத்தும் கொடுப்ப முடியாது என்று சொல்கிறாள். இது ஏன் என்று பாரதி ஒருமுறை கூட யோசிக்கமாட்டாரா? அதே சமயம், தனது குடும்பத்திற்கு தவறான மருந்தை கொடுத்த வெண்பாவை ஏற்றுக்கொண்ட பாரதி, கண்ணம்மாவிடம் என்ற உண்மை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முயற்சிக்காதது ஏன் என்ற பல கேள்விககள் சுற்றிக்காண்டிருக்கின்றனர்.
ஆனால் இப்போது தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழிக்கு ஏற்ப காரில் வந்து மாட்டிய கண்ணம்மாவின் பொண்ணு மீது பாரதிக்கு இவ்ளோ அக்கரை என்று ஆச்சரியப்பட வைக்கிறது இந்த ப்ரமோ. ஆனாலும் இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மீண்டும் எழுச்சி பெற வேண்டும் என்றால், உண்மையை உடைத்துவிடுங்கள் டைரக்டர் சார்…!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil