scorecardresearch

பாரதியின் கண்டிஷன் லட்சுமியா? யோசிக்க வைக்கும் அடுத்த ப்ரமோ

Tamil Serial Update : வீழ்ச்சியை சரிகட்ட வேண்டும் என்றால், ரசிகர்கள் பாரதி கண்ணம்மா இடையே நெருக்கம் அதிகரிக்க வேண்டும். அப்படி செய்தால் உடனடியாக சீரியல் முடிந்துவிடும்

பாரதியின் கண்டிஷன் லட்சுமியா? யோசிக்க வைக்கும் அடுத்த ப்ரமோ

Tamil Serial Rating Bharathi kannamma : நேரடியாக மூக்கை தொடுவதை விட தலையை சுற்றி மூக்கை தொடுவதற்கு முக்கிய உதாரணமாக உள்ள சீரியல் பாரதி கண்ணம்மா. விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இந்த சீரியலுக்கு பல ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகினறனர். ஆனால் கடந்த சில எபிசோடுகள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.

ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் உண்மை தெரிந்துவிடும். அதை விட்டுவிட்டு கோவில் பொங்கல் பூசாரி அருள்வாக்கு என்று சீரியலை ஜவ்வாக இழுத்து செல்வது பாரதி கண்ணம்மாவின் ஸ்பெஷல். மனைவி மீது சந்தேகப்பட்டு தோழியை நம்பும் பாரதி இப்போ தோழியும் கெட்டவள் என்று தெரிந்துகொண்டார். ஆனாலும் கண்ணம்மா மீது நம்பிக்கை வரவிலலை.

நம்பிக்கை இல்லை என்றாலும், மற்ற ஆண்களுடன் கண்ணம்மா பேசினால் கண்டிக்கிறார். தெய்வம் உண்மையை சொல்லும் என்ற நம்பிக்கையில் நீதி காத்த அம்மன் கோவிலில் பொங்கல் வைத்தார். அதில் கண்ணம்மா பக்கமே நீதி உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் அவரது பொங்கல் முதலில் பொங்கியது. ஆனால் இதை நம்பாமல் பாரதி தெய்வத்தையே சந்தேகப்படுகிறார்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான ப்ரமோவில், கண்ணம்மாவை மனைவியாக ஏற்று்ககொள்கிறேன் என்று சொல்லும் பாரதி, அதற்கு ஒரு கண்டிஷன் என்று சொல்கிறார். இதை கேட்டு அனைவரும் ஷாக் ஆக இன்னும் 5 நாட்களில் என்று ப்ரமோ முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் பாரதி என்ன கண்டிஷன் போடுவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஒரு சில ரசிகர்கள் என்ன டிஆர்பி ரேட்டிங் கம்மியா இருக்கிறதால ட்விஸ்ட் வைக்கிற மாதிரி கொண்டு போறீங்களா என்று கேட்டுள்ளனர். இதனிடையே தற்போது பாரதி கண்ணம்மா சீரியலின் அடுத்த ப்ரமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிய கட்சிகள் இடம்பெறும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

முந்தைய ப்ரமோவின் காட்சிகளையே இந்த ப்ரமோவிலும் வைத்துள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால், முதல் ப்ரமோவில் 5 நாட்கள் என்றால் 2-வது ப்ரமோவில் 2 நாட்கள் என்று சொல்கின்றனர். இதை பார்த்த ரசிகர்கள் கடுப்பின் உச்சத்திற்கே சென்றுள்ளனர். நாளையும் இதே காட்சிகளை வைத்து இன்னும் ஒரு நாள் என்று சொல்லிடாதீங்க என்று கூறி வருகின்றனர்.

பாரதி கண்ணம்மாவின் இந்த சஸ்பென்ஸ் பொதுவான ரசிகர்களை கவரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விறுவிறுப்பாக பல அதிரடி திருப்பங்களுடன அரங்கேறிய பாரதி கண்ணம்மா தற்போது நடிகை மாற்றம் சலிப்பை தட்டும் காட்சிகள் என்று டிஆர்பி ரேட்டிங்கில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தற்போதுவரை இந்த வீழ்ச்சியில் இருந்து மீளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வீழ்ச்சியை சரிகட்ட வேண்டும் என்றால், ரசிகர்கள் பாரதி கண்ணம்மா இடையே நெருக்கம் அதிகரிக்க வேண்டும். அப்படி செய்தால் உடனடியாக சீரியல் முடிந்துவிடும். அதனால்தான் இப்போது பாரதி கண்ணம்மாவை ஏற்றுக்கொள்வது போல காண்பித்து விட்டு ஒரு கண்டிஷன் என்று சஸ்பென்ஸ் வைத்துள்ளார் இயக்குநர். என்ன கண்டிஷன் என்று ரசிகர்கள் மண்டையை பீய்த்துக்கொள்ள எபிசோடுக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறனர்.

இந்த எதிர்பார்ப்பே பாரதி கண்ணம்மா சீரியல் டிஆர்பி ரேட்டிங் உயர்விற்கு முக்கிய காரணமாக இருக்கும். ஆனால் பாரதி சொல்லும் கண்டிஷனுக்கு கண்ணம்மா சம்மதம் சொல்லப்போவது இல்லை இருவரும் மீண்டும் முட்டிக்கொண்டுதான் இருப்பார்கள். அப்படி கண்ணம்மா சம்மதம் சொல்லிவிட்டால், சீரியல் முடிவுக்கு கரும் என்பதே பல ரசிகர்களின் கருத்தாக உள்ளது. மேலும் லட்சுமியின் அப்பா யார் அவரிமே லட்சுமியை விட்டுவிட்டு வா என்று பாரதி சொல்லுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial bharathi kannamma rating update with promo video