Advertisment

நடிகருடன் லிப்லாக்... எதிர்நீச்சல் ஜனனியா இவர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

தற்போதைய தமிழ் சின்னத்திரையில் பேவரெட் நாயகியாக மாறியுள்ள நடிகை மதுமிதா பெங்களூரை சேர்ந்தவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ethirneechal Janani

Etrhirneechal Serial Janani

சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா பிரபல நடிகர் ஒருவருடன் லிப்லாக் முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் சீரியல் எதிர்நீச்சல். ஆணாதிக்கத்திற்கு எதிரான போராடும் குடும்ப பெண்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலை கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்கி வரும் நிலையில், அவரே இந்த சீரியலின் ஜீவாநந்தம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் ஆணாதிக்கம் படைத்த வில்லத்தனத்தில் மாரிமுத்து மிரட்டி வருகிறார்.

இந்த சீரியலில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை மதுமிதா. எச். தற்போதைய தமிழ் சின்னத்திரையில் பேவரெட் நாயகியாக மாறியுள்ள இவர் பெங்களூரை சேர்ந்தவர். நடிப்பதற்கு விருப்பம் இல்லை என்றாலும் இவரது அப்பாவிடம் சிலர் உன் மகள் நடிக்க போகலாம் அழக்காகத்தான் இருக்கிறார் என்று சொல்லவே அதன்பிறகு நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார். ஆனாலும் இவருக்கு பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

publive-image

சில முயற்சிக்கு பின் ஒருகட்டத்தில் தெலுங்கு சீரியலில் வாய்ப்பை பெற்ற இவர், தற்போது திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது எதிர்நீச்சல் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், மதுமிதாவுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. இதனிடையே இவர் தெலுங்கு சீரியலில் நடிகருடன் லிப்லாக் கொடுக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இது நம்ம ஜனனியா என்று அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர். எதிர்நீச்சல் சீரியலில் இவர் அமைதியின் சிகரமாக இருந்த இவர், இப்போது முத்தம் கொடுப்பது போன்ற வீடியோவை பார்த்ததும் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment