Advertisment

எதிர் நீச்சல் பர்ஹானா இப்போ அமெரிக்காவில் ஃபேமஸ்: எப்படின்னு அவரே சொல்றார் பாருங்க!

அடிப்படையில் இஸ்லாமிய பெண்ணான ஜீபா ஷெரின் சீரியலிலும் இஸ்லாமிய பெண் கேரக்டரிலேயே நடித்து வருகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ziba

எதிர்நீச்சல் நடிகை ஜீபா ஷெரின்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை ஜீபா ஷெரின் தற்போது அமெரிக்காவில் ஃபேமஸ் ஆகியுள்ளார்.

Advertisment

சின்னத்திரை ரசிகர்களை கட்டிப்போடுவதில் சன்டிவி சீரியல்களுக்கு எப்போதும் முன்னணி இடம் உண்டு. அந்த வகையில் ஒளிபரப்பை தொடங்கியது முதலே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் இதுவரை பெறாத புள்ளிகளை பெற்று வரும் சீரியல் எதிர்நீச்சல். கோலங்கள் தொடரின் மூலம் முத்திரை பதித்த இயக்குனர் திருச்செல்வம் இந்த தொடரை இயக்கி வருகிறார்.

நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து இந்த சீரியலில் நெகடீவ் கேரக்டரில் அசத்தி வரும் நிலையில், இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இந்த சீரியலை இயக்கி வரும் திருச்செல்வம் ஜீவாநந்தம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். கதையில் இதுவரை வில்லன் என்று காட்டப்பட்டு வரும் ஜீவாநந்தம் தனக்கு 2 உதவியாளர்களை வைத்துள்ளார். அதில் ஒருவர் தான் ஜீபா ஷெரின்

அடிப்படையில் இஸ்லாமிய பெண்ணான இவர் சீரியலிலும் இஸ்லாமிய பெண் கேரக்டரிலேயே நடித்து வருகிறார். மேலும் ஹிஜாப் அணிந்து சின்னத்திரையில் நடித்து வரும் முதல் நடிகை அவர் தான் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே தற்போது ஜீபா ஷெரின் அமெரிக்கா வரை ஃபேமஸ் ஆகியுள்ளார். ஜீபா பற்றிய செய்திகள் அமெரிக்க தொலைக்காட்சி சேனல்களில் இடம்பெற்றுள்ளது.

எதிர்நீச்சல் சீரியலில் அவர் நடித்த காட்சிகள் குறித்து செய்தியில் இடம்பெற்றுள்ளது. அந்த செய்தி குறித்து அமெரிக்க சாலையோரம் உள்ள விளம்பர ஸ்கிரீன்களில் ஒளிபரப்பாகி உள்ளது. இதை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஜீபா, உலகத்திடம் இருந்து இந்த அன்பை எதிர்பார்க்கவில்லை. உங்கள் பர்ஹானாவை நேசித்தற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment