scorecardresearch

படப்பிடிப்பு தளத்தில் கத்திகுத்து சம்பவம்… பதறிப்போன சீரியல் நடிகை

நடிகர் கார்த்திக் ராஜ் தற்போது மீண்டும் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க உள்ளார். கார்த்திகை தீபம் என்று பெரிடப்பட்டுள்ள இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக ஆர்த்திகா நடித்து வருகிறார்.

படப்பிடிப்பு தளத்தில் கத்திகுத்து சம்பவம்… பதறிப்போன சீரியல் நடிகை

ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் கார்த்திக் ராஜ். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து பிளாக் அண்ட் வொய்ட் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நேரடியாக ஜீ தமிழில் பிரீமியர் செய்யப்பட்டது.

இதனிடையே நடிகர் கார்த்திக் ராஜ் தற்போது மீண்டும் ஜீ தமிழ் சீரியலில் நடிக்க உள்ளார். கார்த்திகை தீபம் என்று பெரிடப்பட்டுள்ள இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக ஆர்த்திகா நடித்து வருகிறார். ஏற்கனவே கார்த்திக் ராஜ் நடிப்பில் வெளியாக பிளாக் அண்ட் வொயிட் என்ற படத்தில் ஆர்த்திகா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில், கார்த்திகை தீபம் தொடரின் ப்ரமோ தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இது தொடர்பான கேள்விகளுடன் நாயகி ஆர்த்திகாவை தொடர்புகொண்டோம்.

பள்ளி மற்றும் கல்லூரி வாழ்கை சினிமா வாய்ப்பு

கேரளாவை பூர்வீகமான கொண்ட நடிகை ஆர்த்திகா பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை கேரளாவிலேயே முடித்துள்ளார். படிக்கும்போது இது பற்றி எதையும் யோசிக்கவில்லை. நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது அங்கு வந்த ஒரு டைரக்டர் டீம் என்னை பார்த்துவிட்டு சினிமாவில நடிக்க ஆர்வம் இருக்கா என கேட்டார்கள். ஆனால் அப்போது எனக்கு புரியவில்லை. எனது குடும்ப சூழ்நிலையும் அந்த மாதிரி இருந்தது.

அதுவும் இல்லாமல் இன்டஸ்ட்ரி ரொம்ப மோசமாக இருக்கு பொண்ணுங்களுக்கு சேப்ஃடி இல்லை என்று சொன்னாங்க. இதனால் எங்க வீட்ல கொஞ்சம் யோசிச்சாங்க. அதன்பிற டைரக்டர் டீம் எங்கள் வீட்டார்களிடம் பேசிய பிறகு வீ்ட்டில் அனுமதி கொடுத்தார்கள். அதன்பிறகு ஒரு மலையாள படத்தில் நடித்தேன். ஆனால் இந்த வாய்ப்பிற்கு முன்பு நான் சினிமா இன்டஸ்ரிக்கு வருவேன் என்று யோசிக்கவே இல்லை.   

கேமரா முன் நின்ற முதல் அனுபவம்

ஃபர்ஸ்டைம் நான் கேமரா முன் நின்றபோது இப்போ ஷாட் எடுக்க போறாங்க எல்லாரும் நம்மலதான் பாப்பாங்க டைலாக் பேசும்போது என்ன நினைப்பாங்களோ என்று கொஞ்சம் பயம் இருந்தது. இதனால் முதல் ஷாட்டில் எனக்கு டைலாக் எக்ஸ்பிரஷன் எதுவுமே வரல. ஆனால் டீமில் இருந்தவர்கள் சப்போர்ட் செய்ததால் அதன்பிறகு நன்றாக நடித்து முடித்தேன். முதல் படம் அப்படி முந்தாலும் 2-வது படத்தில் தம்பி ராமையா சாருடன் இணைந்து நடித்தேன். அவர் எனக்கு சப்போர்ட்டாக இருந்ததால் நன்றாக நடிக்க முடிந்தது.

ஷூட்டிங்கின்போது மறக்க முடியாத அனுபவம்

கடலூர் அருகில் ஷூட்டிங்க எடுத்துக்கொண்டிருந்தபோது  அங்கு சிலபேர் குடித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது இங்கு ஃபைட் சீன் எடுத்துக்கொண்டிருந்ததால் டிஸ்டர்பா இருக்கு என்று சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அப்போர் அங்கிருந்தவர்கள் நிஜமாகவே சண்டை போட்டுக்கொண்டு யாரையே அடித்தா அல்லது குத்துனதா தெரியல கையெல்லாம் ஒரே ரத்தமா சிலபேர் ஓடுனாங்க. ஷூட்டிங்க்காதான் இப்படி இருக்காங்கனு நினைத்தோம். ஆனால் அதன்பிறகுதான் அது நிஜமான சண்டை யாரோ யாரையே குத்திட்டாங்கனு தெரஞ்சுது நாங்க பயந்துட்டோம்.

கார்த்திகை தீபம் சீரியல் வாய்ப்பு

ஜீ தமிழின் மாரி சீரியலுக்காக எனது போட்டோவை காட்டி நடிகை அபிதா என்னை பற்றி கூறியுள்ளார். நாங்கள் இருவரும் கோட்டயம் என்பதால் அடிக்கடி பேசிக்கொள்வோம். அதன்பிறகு ஆடிஷன் வச்சாங்க. ஆனால் அப்போது கொஞ்சம் மெச்சூர்டான பர்சன் வேண்டும் என்று சொல்லி வேறு ஒருவரை தேர்வு செய்துவிட்டார்கள். அதன்பிறகு இந்த பிராஜக்ட் வரும்போது மாரி சீரியலின்போது நான் வந்ததை ஞாபகம் வைத்துக்கொண்டு இப்போது கூப்பிட்டார்கள்.

மீண்டும் கார்த்திக் ராஜூடன்

இந்த சீரியலின் டெஸ்ட் ஷூட் அட்டன் பண்ணும்போது கார்த்திக் ராஜூதான் நாயகனாக இருப்பார் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அங்க வந்த பிறகுதான் தெரிந்தது உண்மையாவே அவர்தான் இந்த சீரியலில் நடிக்க உள்ளார் என்று. அதற்கு முன்னாடி எனக்கு கண்பார்மா தெரியாது. பிளாக் அண்ட் வொயிட் படம் பண்ணிட்டு இருக்கும்போது அடுத்து ஒரு பிராஜக்ட் பண்ணணும்னு எந்த ஐடியாவும் இல்லை.

அடுத்து படங்களில் நடிப்பது குறித்து…

தற்போது சீரியலில் நடித்து வருவதால், இங்கேயே அதிக நாட்கள் ஷூட்டிங் இருக்கும். ஆனால் படங்களில் நடிக்க சென்றால் தொடர்ந்து 10 அல்லது 15- நாட்கள் ஷூட்டிங் போக வேண்டி இருக்கும். அதனால் இப்போதைக்கு எந்த படத்திலும் நடிக்க வில்லை.

கார்த்திகை தீபம் சீரியல் குறித்து…

கருப்பாக பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை தான் கார்த்திகை தீபம். கருப்பாக இருந்தாலும் அந்த பெண்ணிற்கு நன்றாக பாடும் திறமை இருக்கும். இந்த பாட்டு திறமையை பயன்படுத்தி ஒரு பணக்காரர் தனது மகளுக்கு பதிலாக பாட வேண்டும் என்று கேட்கிறார். அதற்காக உங்கள் குடும்பத்தின் கஷ்டத்தினை போக்குவதாக கூறுகிறார். இதற்கு அவர் என்ன முடிவு செய்கிறார் என்பதுதான. ஒரு பாவப்பட்ட பெண் கேரக்டர். டிசம்பர் 5-ந் தேதி இந்த சீரியல் வெளியாக உள்ளது.  

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial karthikai deepam actress arthika interview update in tamil