Advertisment

6 மாதங்கள் ஓவர்: 2024-ல் இதுவரை வெளியான புதிய சீரியல்கள் லிஸ்ட்; எந்த சீரியலுக்கு அதிக டி.ஆர்.பி?

தமிழ் சின்னத்திரையில், 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய சீரியல்கள் மற்றும் அதற்கு மக்கள் கொடுத்து வரும் வரவேற்பு குறித்து பார்ப்போம்.

author-image
D. Elayaraja
புதுப்பிக்கப்பட்டது
New Update
2024 tamil serial

2024 சின்னத்திரையில் வெளியான புதிய சீரியல்கள்

தமிழ் சின்னத்திரையில், சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு சீரியல் முடிவதும்,அதற்கு பதிலாக மற்றொரு சீரியல் உடனடியாக தொடங்குவதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இதில் டி.ஆர்.பி ரேட்டிங்கை வைத்தே சீரியல்களுக்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து கணக்கிடப்படுகிறது.

Advertisment

இந்த டி.ஆர்,பி பட்டியலில், சன் டி.வி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு இடையே போட்டி இருந்து வருகிறது. இந்த போட்டியில் ஜீ தமிழ் சீரியல் இல்லை என்றாலும், ஜீ தமிழ் சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது 2024-ம் ஆண்டு 6 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இந்த 6 மாதத்தில் தமிழில் தொடங்கப்பட்ட புதிய சீரியல்களும், அதற்கு கிடைத்துள்ள வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.

சன் டி.வி 2004-ம் ஆண்டு புதிய சீரியல்கள்

லட்சுமி

publive-image

கடந்த 2006-ம் ஆண்டு மீனா நடிப்பில் லட்சுமி என்ற சீரியல் ஒளிபரப்பானது. 2008-ம் ஆண்டு வரை ஒளிபரப்பான இந்த சீரியல் 500 எபிசோடுகள் வந்தது. அதன்பிறகு தற்போது லட்சுமி என்ற பெயரில் புதிய சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சஞ்சீவ் வெங்கட், ஸ்ருதி ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல், கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி தொடங்கப்பட்டது. திருமணமான பெண் ஒருவர் தனது தாய் வீட்டை பார்க்க வேண்டுமா அல்லது மாமியார் வீட்டை பார்க்க வேண்டுமா என்ற அடிப்படையில் திரைப்பதை அமைக்கப்பட்டுள்ளது, டி.ஆர்.பி ரேட்டிங்கில் இந்த சீரியல் இடம்பிடிக்கவில்லை என்றாலும், இதற்கான ரசிகர்கள் உள்ளனர்.

அனாமிகா

anamika Serial

கடந்த மே மாதம் 19-ந் தேதி முதல் அனாமிகா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், அக்ஷதா தேஷ்பாண்டே, தர்ஷாக் கௌடா, ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். முக்கோண காதல் கதையுடன் சேர்ந்து 200 ஆண்டுகள் மேலாக நடந்து வரும் ஒரு திகில் சம்பவத்தின் பின்னணியில் இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பிடிக்கவில்லை என்றாலும், த்ரில்லர் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் வரவேற்பை பெற்று வருகிறது.

மல்லி

publive-image

கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மல்லி. குடும்ப உறவுகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், விமல் வெங்கடேஷ், நிகிதா ராஜேஷ் ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும நிலையில், பழம்பெரும் நடிகைகளான நளினி, பூர்னிமா பாக்யராஜ், அம்பிகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். ஒளிபரப்பை தொடங்கியது முதல் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வருகிறது மல்லி சீரியல்.

மருமகள்

publive-image

கடந்த ஜூன் 10-ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் மருமகள். சிக்கனத்தை கடைபிடிக்கும் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே நடக்கும் கலாட்டாக்களை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், நந்தினி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாக, ராகுல் ரவி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சன்டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் நடித்த கேப்ரியல்லா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். ஒளிபரப்பான முதல் வாரத்தில் டி.ஆர்.பி ரேட்டிங்கில் 2-வது இடத்தை பிடித்து அசத்திய இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ராமாயணம் (டப்பிங்)

சன் டிவியில் ஏற்கனவே ராமாயணம் தொடர்பான பல டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளது. அநத வரிசையில் தற்போது மீண்டும் ஒரு ராமாயணம் சீரியல், இடம் பிடித்துள்ளது. இந்தியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்போது மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல், ஒருமுறை மட்டும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் இடம் பிடித்துள்ளது.

2024 விஜய் டிவி புதிய சீரியல்கள்

வீட்டுக்கு வீடு வாசப்படி

publive-image

ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில்ல நடித்த திராவியம் ராஜகுமாரன், ஷ்ரீதா சிவதாஸ் ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல், கூட்டு குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22-ந் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

சின்ன மருமகள்

Chinnamarumagal

சன் டிவிக்கு மருமகள் என்றால், அதன் போட்டி சேனலான விஜய் டிவியில் சின்ன மருமகள் என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நவீன்குமார் சுவேதா ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்து வருகின்றனர். மேலும் நடிகர் ஓ.ஏ.கே.சுந்தர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ஜனவரி 22-ந் தேதி முதல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

தங்கமகள்

publive-image

ஜனவரி 22-ந் தேதி தொடங்கப்பட்ட மற்றொரு சீரியல் தங்கமகள், மறைந்த நடிகர் மயில்சாமியின் மகள் யுவன் மயில்சாமி முதன்மை கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், அஸ்வினி ஆனந்தட்டியா நாயகியாக நடித்து வருகிறார். மேலும், நடிகர் தலைவாசல் விஜய் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல், குடும்ப உறவுகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பனிவிழும் மலர்வனம்

publive-image

அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், பாரதிகண்ணம்மா வினுஷா, தமிழிழும் சரஸ்வதியும் ராயன், ஈரமான ரோஜாவே, சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். அண்ணன் தங்கை பாசம், காதல் அடிப்படையாக வைத்து இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

2024 ஜீ தமிழ் சீரியல்கள்

நினைத்தேன் வந்தாய்

publive-image

கடந்த ஜனவரி மாதம், 22 ந்தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும், கீர்த்தனா, ஜாஸ்மின்ரத், அஞ்சலி ராவ் ஆகியோரும் நடித்து வருகின்றனர். குடும்பம் குழந்தைகள் ஆகியவற்றுடன் திகில் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த சீரியலின் திரைக்கதை அமைக்கப்ட்டுள்ளது.

வீரா

Veera va

ஆண் இல்லாத குடும்பத்தை ஒரு பெண் எப்படி முன்னேற்றத்தை நோக்கி நகர்த்துகிறார் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், ரோஜா சீரியல் புகழ் சுப்பு சூரியன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். வைஷ்ணவி அருள்மொழி, அருண் சீசர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சத்தை கிள்ளாதே

publive-image

கடந்த ஜூலை 1-ந் தேதி முதல் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. நடிகர் ஜெய் ஆகாஷ், ரேஷ்மா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில் சில காரணங்களால் திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு, அவர்கள் வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment