scorecardresearch

வாழ சொல்லும் அப்பா… விலக சொல்லும் அம்மா… மகா யார் பக்கம்?

Tamil Serial Update : மாயன் விவகாரத்தில் மகா என்ன முடிவு எடுப்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

Tamil Serial Naam Iruvar Namakku Iruvar Update : மாயனோடு சேர்ந்து வாழு என்று அப்பா சொல்ல… அவனோடு சேர் வேண்டாம் என்று அம்மா சொல்ல… யார் சொல்வதை கேட்பது என்று குழப்பத்தில் இருக்கிறாள் மகா… இது எங்கே போய் முடியுமோ என்று யோசிக்க வைத்துள்ள சீரியல் தான் நாம் இருவர் நமக்கு இருவர்.

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இந்த சீரியலில், மிர்ச்சி செந்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவருடன் மோனிஷா, சபிதா ஆனந்த், பிக்பாஸ ராஜூ, ஆகியோர் நடித்து வருகின்றனர். டபுள் ரோல் கதையான இந்த சீரியலில், மாயன் மற்றும் மாறன் என மிர்ச்சி செந்தில் வித்தியாசம் காட்டி வருகிறார்.

சிறுவயதில் தனது தம்பி மாறனுடன் அம்மா வெளிநாடு சென்று விட்டதால், தாய்மாமா அரவனைப்பில் வளரும் மாயன், தனது அப்பா 2-வது திருமணம் செய்துகொண்டதால் கோபத்தில் இருக்கிறான். ஒரு கட்டத்தில் அப்பா பற்றி புரிந்துகொள்ளும் மாயன் அவரை இழந்துவிட தனது அப்பாவின் 2-வது மனைவி மற்றும் 3 தங்கைகளை தனது பொறுப்பில் ஏற்றுக்கொள்கிறனர்.

இதற்கிடையே தாய் மாமா மகள் மகாவை திருமணம் செய்துகொள்கிறான். அப்போது இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகா மாயனை விவாகரத்து செய்ய கோர்ட்டுக்கு செல்கிறாள். இந்த கேஸ் இப்போது நடந்துகொண்டிருக்க மாயனை பற்றி புரிந்துகொள்ளும் மகா அவனுடன் சேர்ந்து வாழ யோசிக்கிறாள். அப்போது வெளிநாட்டில் இருந்து தம்பியுடன் ஊருக்கு வரும் அம்மா மாயனை தன்னுடன் வைத்துக்கொள்ள விரும்புகிறாள்.

ஆனால் அப்பாவின் 2-வது மனைவியான நாச்சியாரை அம்மா ஏற்றுக்கொள்ளாததால், மாயன் தனது அம்மாவை ஏற்றுக்கொள்வில்லை. இதனால் கோபமடையும் மாறன், மாயனை பழிவாங்க பூர்வீக வீட்டை இடித்துவிடுகிறான். இதனால் இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட, மாறி மாறி பழிவாங்கிக் கொள்கின்றனர். இதற்கிடையே தங்கையின் பின்னால் சுற்றும் போலீஸை மாயன் அடித்துவிட்டதால் சிக்கலில் சிக்கிக்கொள்கிறான். ஆனால் போலீஸ்க்கு எதுவும் ஆகவில்லை என்பதால் தப்பிவிட்டான்.

இந்த பிரச்சினையே தற்போது மாயனின் பெரிய தலைவலியாக ஏற்பட்டுள்ளது. மகா மாயன் விவாகரத்து கேஸ் அடுத்த வாரம் வருகிறது. அப்போது உன்கூட வாழ விருப்பம் இல்லை என்று நான் சொல்லிவிடுகிறேன என்று மகா சொல்கிறாள். இதற்கிடையே மகாவின் அப்பா மாயன் உன்க்கு செய்த நல்லதை நினைத்துப்பார் அவனுடன் சேர்ந்து வாழு என்று சொல்கிறார்.

ஆனால் மகாவின் அம்மா என்னைக்கா இந்தாலும் அவன் யாரையாவது குத்திவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிடுவான் அப்போது நீ தனியாதான் இருக்க வேண்டும். அவன் உனக்கு செய்த துரோகத்தை நினைத்து பார் என்று சொல்லிவிடுகிறார். இதனால் இருவரில் யார் சொல்வதை கேட்பது என்று மகா குழப்பத்தில் இருக்க அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதனால் மகா என்ன முடிவு எடுப்பார் என்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் அடிக்கடி எதிர்பாராத திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. அதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்ட ராஜூ சீரியலில் வெளிநாடு சென்றுவிட்டதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் எப்போது மீண்டும் ரீ என்டரி கொடுப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் ரசிகர்கள் பலரும் கத்தி இல்லாமல் சீரியல் ஜவ்வாக இழுத்துக்கொண்டிருப்பதாகவே கூறி வருகினறனர். இந்த சீரியலில் அனைத்து நடிகர் நடிகைகளும் நனறாக நடித்து வந்தாலும், கத்தி கேரக்டரில் நடித்து வந்த ராஜூவின் டைமிங் காமெடி இப்போது சீரியலில இல்லாது பெரும் குறையாக பார்க்கப்படுவதே நிதர்சமான உண்மை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial naam iruvar namakku iruvar serial rating update