அதே டைட்டில்… அதே மாதிரி ஹீரோ… விஜய் டிவி சீரியலில் கமல்ஹாசன் டச்சிங்!

Rajapaarvai serial tamil news: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘நாம் இருவர் நமக்கிருவர்’ சீரியலின் முதல் பாகத்தில், தாமரை என்னும் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மி நடித்திருந்தார்.

Tamil serial news in tamil kamalhaasan’s rajapaarvai titled to vijay tv’s serial
Tamil serial news in tamil kamalhaasan’s rajapaarvai titled to vijay tv’s serial

Tamil serial news in tamil:  சமீப காலமாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டைட்டில்கள், முன்பு வெளிவந்த படங்களின் டைட்டில்களோடு ஒளிபரப்பாகுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அதில் கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கிருவர், சத்யா, பிரியாத வரம் வேண்டும், மௌன ராகம், பூவே பூச்சுடவா, முள்ளும் மலரும் ராஜா ராணி, மற்றும் கனா காணும் காலங்கள் போன்றவைகள் ஆகும். இவற்றில் சில சீரியல்கள் 2ம் பாகமாக எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘நாம் இருவர் நமக்கிருவர்’ சீரியலின் முதல் பாகத்தில், தாமரை என்னும் கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மி நடித்திருந்தார். தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘நாம் இருவர் நமக்கிருவர்’ சீரியலின் 2-ம் பாகத்தில் ரசிகர்களால் இவர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவருக்கு 2ம் பாகத்தில் வாய்ப்பு வழங்ப்படவில்லை. அதோடு நடிகை ராஷ்மிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரிச்சு என்பவருடன் திருமணம் நடந்திருந்தது.

இந்நிலையில் தற்போது நடிகை ராஷ்மி மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள தொடரில் நடிக்க உள்ளார். இந்த தொடருக்கு உலகநாயகன் கமல் நடித்த ‘ராஜபார்வை’ படத்தின் டைட்டில் பெயரிடப்பட்டுள்ளது. அதோடு அந்த படத்தில் நடிகர் கமல் பார்வை இல்லாதவராக நடித்திருப்பார், அதே போல இந்த தொடரில் வரும் கதாநாயகனும் நடித்துள்ளார்.

விரைவில் வெளியாகவுள்ள ‘ராஜபார்வை’ தொடரில் சன் டிவி சந்திரலேகா தொடரின் நாயகன் முனாஃப் ரஹ்மான் ஹீரொவாக நடித்திருகிறார்.இந்த தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news in tamil kamalhaasans rajapaarvai titled to vijay tvs serial

Next Story
ஸ்ரீரெட்டி டிக்-டாக்… வனிதாவுடன் சினிமா..! கோலிவுட்டை தேடி வந்த ‘நடமாடும் நகைக்கடை’ பின்னணி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com