Tv Actress Vaishali Thaniga Stunt : விஜய் டிவிக்கு அடுத்தபடியாக சீரியலுக்காக பெரும் வரவேற்பை பெற்று வரும் டிவி ஜீ தமிழ். இதில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை சீரியல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆஷா கவுடா, நந்த கோபால், வைஷாலி தனிகா, நந்தினி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த தொடரின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வைஷாலி தனிகாவை, ஸ்டண்ட் கலைஞர்கள் கயிறு கட்டி மேலே அந்தரத்தில் தொங்கவிட்டு ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கியுள்ளனர். இவ்வளவு விபரீதமான காட்சியை, துணிச்சலாக டூப் போடாமல் நடித்த வைஷாலிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ காட்சியை வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து அவர், கூறுகையில், சின்னத்திரையோ அல்லது திரைப்படமோ அதில் அர்ப்பணிப்பு முக்கியம். மேலும் கோகுலத்தில் சீதை குழுவினர் இன்றி சாத்தியமில்லை என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் சீரியலுக்காக அஜித் அளவுக்கு ரிஸ்க் எடுக்குறீங்களே என்று வியந்து பாராட்டியுள்ளனர்.
View this post on Instagram
விஜய் டிவியில் ஒளிபரபாகி வரும் ராஜா ராணி சீரியலில் நடித்துள்ள இவர் கடந்த சில எபிசோடுகளில், பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் திடீர் விசிட்டாக வந்து சென்றது குறிப்பிடத்தக்கது.