இப்படி பழி வாங்க சபதம் எடுக்கையில்… குழந்தையை மாத்திட்டீங்களே…!

Tamil TV News : இந்த குழந்தையை நல்லபடியா பெத்து எடுத்து, உன் பணக்கரைத் திமிருக்கு பாடம் புகட்டறேன்னு சபதம் போடறாங்க.

Chandralekha Serial, Sun TV, Tamil Serial News
Chandralekha Serial, Sun TV, Tamil Serial News

Sun TV Chandralekha serial : சன் டிவியில் சந்திரலேகா கடந்த 7 வருஷமா ஒளிபரப்பாகி வந்த மெகா சீரியல். தினமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்தது. கோவிட் 19 தொற்று லாக்டவுன் காரணமாக இந்த சீரியல் மீண்டும் முதலில் இருந்து ஒளிபரப்பாகி வருது. இதில் சந்திராவாக நடித்து இருக்கும் ஸ்வேதா தல அஜீத் கூட ஆழ்வார் படத்தில் நடிச்சு இருக்கார். அஜீத்தின் தங்கையாக நடித்த இந்த அழகு பெண் ஸ்வேதா புனேவை சேர்ந்தவர் என்றாலும், வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில் தானாம். சன் டிவி சந்திரலேகா சீரியலில் நடித்துக்கொண்டே, சன் டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார். இவரை சின்னத்திரை ஹன்சிகா என்று சன் டிவி வட்டாரத்தில் செல்லமாக அழைக்கிறார்கள்.

ட்ரடிஷனல் அனுபமா, ஸ்டைலிஷ் ராய் லட்சுமி – படத்தொகுப்பு

சந்திரலேகா சீரியலில் .சந்திரா, லேகா என்று இரண்டு ஹீரோயின்… சந்திராவாக நடித்து இருப்பவர் ஸ்வேதா. சந்திரலேகா சீரியல்படி, சந்திரா அம்மாவும், லேகா அம்மாவும் தான் ஆரம்ப ஹீரோயின்கள். அடுத்த தலைமுறை கதையாக தான் சந்திர, லேகா கதை வருகிறது. தம்பி பொண்டாட்டி கொடுமையில் சிக்கித் தவிக்கும் லேகா அம்மா மீனா, தனது வயிற்றில் வளரும் லேகாவை தம்பி பொண்டாட்டி வசுந்தரா எப்படியாவது கலைப்பேன் என்று சபதம் எடுக்க பயத்தில், தம்பி வீட்டை விட்டு கிளம்பறாங்க. கிளம்பும்போது ஏழைன்னா உனக்கு அவ்ளோ இளக்காரமா? இந்த குழந்தையை நல்லபடியா பெத்து எடுத்து, உன் பணக்கரைத் திமிருக்கு பாடம் புகட்டறேன்னு சபதம் போடறாங்க.

 

சரி, இந்த சபதம்தான் கதை என்று நினைத்தால், ஆஸ்பிடலில் மீனா குழந்தை, லேகா வசுந்தராவிடமும், வசுந்தரா குழந்தை மீனாவிடமும் என்று மாறிப்போய் விடுகிறது. இந்த உண்மை தெரிஞ்சவங்க மீனா மட்டும் தான். தம்பி பொண்டாட்டியிடம் உண்மையை சொல்லியும் எடுபடாமல் போக தனது குழந்தை லேகாவை வசுந்தரவிடம் வளர விட்டு மீனா ரகசியம் காக்கிறார். இப்போ பணக்காரத் திமிரை அடக்க என்ன செய்வாங்க என்று பார்த்தால், கதை வேறு பாணியில் பயணிக்கிறது. எடுத்த சபதம் வீணாய் போச்சு, அவ்ளோதான் கதை…

சென்னை ஓட்டல்களில் கட்டண தனிமைப்படுத்துதல் அறைகள் : அரசு நடவடிக்கை

வளர்த்த சந்திரா, பெற்றெடுத்த பெண் லேகா கொஞ்ச வருஷம் சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் லேகா தான் மீனாவின் பெண் என்றும், சந்திரா வசுந்தரா பெண் என்றும் தெரிந்து விட, மறுபடி கதை வேறு பணியில் பயணிக்கிறது. இப்படி எல்லாம் பாதையை திருப்பிவிட்டு திருப்பிவிட்டு 7 வருஷமா சீரியலை எடுத்து வந்தது சீரியல் குழு.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news sun tv chandralekha serial

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com