வினுஜாவா, நட்சத்திராவா? கண்ணம்மா ரோலுக்கு செம்ம ஃபைட்

Tiktok fame ‘Vinusha devi’ or Yaaradi Nee Mohini ‘Natchathira’ heavy competition for Kannamma role in Bharathi kannama serial Tamil News: கண்ணம்மாவாக நடித்துவந்த ரோஷினி விலகவுள்ள நிலையில் அவருக்கு பதில் நடிக்க இருப்பது டிக்டாக் பிரபலம் வினுஷா தேவியா அல்லது ‘யாரடி நீ மோகினி’ சீரியல் நட்சத்திராவா என்பதில் போட்டி நிலவுவதாக தெரிகிறது.

Tamil serial news: tiktok fame Vinusha devi or Yaaradi Nee Mohini Natchathira heavy competition for New Kannamma

bharathi kannamma serial tami news update: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒன்றாக உள்ளது. கண்ணம்மா கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு நகர்ந்து வரும் இந்த சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வந்த நடிகை ரோஷினி ஹரிப்ரியன் தற்போது விலகுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகை ரோஷினிக்கு சினிமாவில் நிறைய வாய்ப்புகள் தேடி வருவதாகவும், அதன் காரணமாகவே சீரியலில் இருந்து அவர் விலகினார் என்றும் கூறப்படுகிறது. எனினும், நடிகை ரோஷினி தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ரோஷினி ஹரிப்ரியன்

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து நடிகை ரோஷினி ஹரிப்ரியன் விலகியுள்ள நிலையில் அவருக்கு பதில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒருவரை சீரியல் குழு தேடியது. கண்ணம்மாவாக நடிப்பவர் டஸ்க்கி ஸ்கின் டோன் கதாநாயகியாக இருக்கக்கூடியவராக இருக்க வேண்டுமென்பதால் அவரை தேர்ந்தெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகையை சீரியல் குழு தேர்வு செய்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மாடலிங் மற்றும் டிக்டாக் பிரபலம் வினுஷா தேவி என்று கூறப்படுகிறது. இவரும் டஸ்க்கி ஸ்கின் டோன் கொண்டவர் என்பதால் இந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பார் என்று சீரியல் குழு இவரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் கதாநாயகியாக நடித்த ‘நட்சத்திரா’ தான் கண்ணம்மாவாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் டிக்டாக் பிரபலம் வினுஷா தேவி நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. எனினும், இந்த இருவரில் யார் கண்ணம்மாவாக நடிக்க உள்ளார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், டஸ்க்கி ஸ்கின் டோன் உள்ள இந்த இருவரில் யாரை தேர்வு என்பதில் போட்டி நிலவுவதாக தெரிகிறது. இந்த இரு நடிகைகளில் யாரை சீரியல் குழு தேர்வு செய்கிறது எனபதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial news tiktok fame vinusha devi or yaaradi nee mohini natchathira heavy competition for new kannamma

Next Story
இது வெடிக்கிற திரியா ..? டிரைலர் எப்படி?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com