Tamil Serial Pandian Stores Baakiyalakshmi Rating Update : சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். பாக்யலட்சுமி. விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இந்த இரு சீரியல்களுக்கும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இதில் சகோதரத்துவம் கூட்டு குடும்பத்தின் நன்மைகள் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை எடுத்து கூறுவது பாண்யன் ஸ்டோர். அதேபோல், பெண்களின் உழைப்பு, கணவன் மார்களின் ஏமாற்று வேலை உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளை பிரதிபலிப்பது பாக்யலட்சுமி. ஆனாலும் பாக்யாவின் கேரக்டர் ரசிகர்கள் பலருக்கும் ஒரு உறுத்தலாகவே உள்ளது.
இந்நிலையில், இந்த இரு சீரியல்களையும் இணைத்து தற்போது மகாசங்கமம் என்ற பெயரில் கடந்த 2 வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. பாக்யாவின் மாமனார் பிறந்த நாளுக்காக வந்திருக்கிறார். பிறந்த நாள் ஏற்பாடுகள் கலைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில், இந்த நாளுக்கு பாக்யாவின் கணவன் கோபியின் காதலி ராதிகாவும் வரவுள்ளார்.
ராதிகா எவ்வளவோ வற்புறுத்தியும் அவளுடன் வருவதில் இருந்து எஸ்கேப் ஆகிவிட்ட கோபி இப்போது வீட்டில் மாட்டிக்கொண்டார். போதாகுறைக்கு பாக்யா கோபி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும அங்கும் இங்குமாக மாட்டப்பட்டுள்ளது. இதனால் என்ன செய்வது என்று திகைக்கும் கோபி முகபாவனைகளில் பின்னிஎடுக்கிறார்.
இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது மற்றொரு ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் தீவிரமாக யோசித்துள்ள கோபி, தானும் பாக்யாவுக்கு இருக்கும் புகைப்படம் தெரியாத அளவிற்கு டெக்ரேஷன் பண்ண சொல்கிறார். அதன்பிறகு ராதிகாவும் அவரது மகளும் பங்ஷனுக்கு வருகிறார்கள்.
அந்த நேரம் பார்த்து கோபி ரூமுக்குள் சென்றுவிட கோபியின் அப்பா உண்மையை எப்படியாவது தெரியவைக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார். இதற்கிடையே இனியா அப்பாவை அழைக்க செல்கிறாள். அத்துடன் ப்ரமோ முடிவடைந்துவிடுகிறது. இந்த ப்ரமோ சற்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், எப்படியும் கோபி மாட்டப்போவதில்லை அதற்கு ஏன் இவ்வளவு பில்டப் என்று கேட்டு வருகின்றனர்.
மேலும் ரசிகர்கள் பலரும் பாக்யா இப்படி இருந்தால் கோபி போன்ற ஆட்கள் இப்படிதான் ஏமாற்றுவார்கள் கொஞ்சமாகவது சீரியலை பாசிட்டீவாக கொண்டு செல்லுங்கள் என்று கூறி வருகின்றனர். இப்படி ரசிகர்களை நம்ப வைத்து ஏமாற்றுவதான் இந்த சீரியல் மட்டுமல்லாது விஜய் டிவியின் முக்கிய சீரியல்கள் டிஆர்பியில் சரிவை சந்தித்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“