Advertisment

நாங்க எப்போவும் ஜாலியாதான் இருப்போம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலி குருப் வீடியோ

Tamil Serial Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மட்டுமல்லாது இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் தனித்தயாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாங்க எப்போவும் ஜாலியாதான் இருப்போம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலி குருப் வீடியோ

Pandian Stores Sujitha Viral Video : தமிழ் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது பாண்டியன் ஸ்டார்ஸ். குடும்ப உறவுகளையும் சகோதர பாசத்தையும் மைமான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வருகிறது. மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மட்டுமல்லாது இதில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் தனித்தயாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், வெங்கட், குமரன், சரவண விக்ரம், காவியா அறிவுமணி, ஹேமா ராஜகுமார் என இந்த சீரியலின் அனைத்து நட்சத்திரங்களுமே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகின்றன்றனர்.

இவர்களின் சமூக வலைதளபக்கத்திற்கு நாள்தோறும் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தங்களது அண்றாடபணிகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிட்டு வருகின்றனர். இதில் முக்கியமானவர் சுஜதா தனுஷ் பிறந்த சில மாதங்களிலேயே திரைத்துறையில் அறிமுகமான இவர், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜிதா வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது சுஜிதா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது பாண்டியன் சூப்பர் ஸ்டோர் கடை திறப்பு விழா எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த காட்சியின் படப்பிடிப்புக்கு இடையே இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள அனைவரும் ஒன்றாக சேர்ந்து வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை தற்போது சுஜிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாங்க எப்போவுமே ஜாலியாகத்தான் இருப்போம் என்று அனைவரும் கூறுவது போன்று தொடங்கும் இந்த வீடியோ தமிழ் சினிமாவின் ஒரு ஹிட் பாடலுடன் நிறைவு பெறுகிறது.    

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema Pandian Stores Serial Vijaytv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment