Pandian Stores Serial Rating Update With promo : எல்லாரும் அவங்க அவங்க வேலையை பார்த்தாலும் ஜனார்த்தன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரிக்கும் தன் வேலையை சரியாக செய்துகொண்டிருக்கிறார். இப்போது அந்த முயற்சி வெற்றியிலும் முடிந்துள்ளது.
கூட்டு குடும்பம், அண்ணன் தம்பி பாசம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இதற்கெல்லாம் எடுத்தக்காட்டாய் ஒரு சீரியல் சொல்லுங்க என்று கேட்டால் அனைவருக்கும் டக்குனு வரும் பெயர் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் அடையாளம் என்று கூட சொல்லலாம். ரியல் கூட்டு குடும்பத்தில் உள்ளவர்கள் கூட பொறாமை படும் அளவுக்கு இருந்த இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது பணப்பிரச்சினையால் தனியாக பிரிந்துவிட்டது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் தனம் மீனா இருவருக்கும் குழந்தை உள்ளது. ஆனால் முல்லைக்கு குழந்தை இல்லை. அதற்காக ட்ரீட்மெண்ட் செய்ததில் வீடு கட்ட வைத்திருந்த பணத்தை தூக்கி கொடுத்துவிட்டார்கள். இது பத்தாது என்று வெளியிலும் கடன்வாங்கிவிட்டார்கள். தற்போது இந்த கடனை அடைப்பது யார் என்ற கேள்வியில் வெடித்தது ஒரு பூகம்பம்.
முல்லைக்காக கடன் கொடுத்த ஒருவர் பணத்தை திரும்ப கேட்க, அதற்கு மீனாவிடம் இருக்கும் பணத்தை வாங்கி ஜீவா மூர்த்தியிடம் கொடுக்க, அதை ஜனார்த்தன் பார்த்துவிட வெடித்தது சர்ச்சை வீட்டில் பிரச்சினை. முல்லைக்காக வாங்கிய கடனை அவரும் அவருடைய வீட்டுக்காரர் கதிரும் தான் அடைக்க வேண்டும் என்று சொல்லப்போய் இப்போது அனைவரின் டார்கெட்டும் தனம் மேலே சென்றுவிட்டது.
இதுக்கு எல்லாம் முக்கிய காரணம் தனம் தான் என்று அனைவரும் சொல்ல, பிரச்சினை பெருசாகிறது. அத்துடன் கடந்த வார எபிசோடுகள் முடிந்துவிட்டது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது இந்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகிவிட்டது. இதில் சண்டை பெரிசாகி அடித்துக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
அப்போது குறுக்கிடும் கதிர் இந்த கடனை நான்தான் அடைக்க வேண்டும். அதற்கு கொஞ்சம் டைம் கொடுங்கள். அதுவரை இந்த வீட்டிற்கு வரமாட்டேன் என்று சொல்லி முல்லையை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றுவிட்டார். இதை பார்த்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ரசிகர்கள் பலரும் ஆச்சிரியமடைந்துள்ளனர்.
இது மட்டுமல்லாமல் இதுவரை எத்தனையே பிரச்சினைகளை ஒன்றாக நின்று வெற்றி கண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது முன்பு கண்ணன் செய்த தவறால் உடைந்ததது. இப்போது ஜனார்த்தன் செய்த சூழ்ச்சியால் உடைந்தது. இதை பார்த்த ரசிகர்கள் ஜனார்த்தனை பார்த்து பத்தவச்சிட்டீயே பரட்டை என்று கூறி வருகின்றனர்.
இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில். கதிர் மட்டும்தான அல்லது மற்றவர்களும் பிரிந்து சென்றுவிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil