scorecardresearch

வீட்டில் மாட்டிக்கொண்ட சரவணன் சந்தியா… சிவகாமி அம்மா உங்க முடிவு என்ன?

Tamil Serial Update : சந்தேகப்படும் சரவணனின் தம்பி அந்த நியூஸ்பேப்பரை வாங்கி படித்து பார்க்கிறார். எப்படியும் சரவணனின் தம்பி இதை சிவகாமியிடம் சொல்லாமல் இருக்க மாட்டார்.

வீட்டில் மாட்டிக்கொண்ட சரவணன் சந்தியா… சிவகாமி அம்மா உங்க முடிவு என்ன?

Tamil Serial Raja Rani 2 Rating Update : போச்சுடா சிவகாமிக்கு அடுத்த பஞ்சாயத்து வந்தாச்சு… சரவணன் சந்தியா போர்களத்திற்கு ரெடி ஆகலாம் என்று சொல்லும் வகையில் ராஜா ராணி 2 சீரியலில் மற்றொரு பிரச்சிளை புகுந்துள்ளது.

விஜய் டிவியின் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வரும் சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து 2-வது சீசன் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் நடித்த ஆல்யா மானசா மற்றும் சித்து ஆகியோர் நடித்து வரும் இந்த சீரியலில், ஆல்யா மானசா பிரசவம் காரணமாக சீரியலில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக மற்றொரு நடிகை நடித்து வரும் இந்த சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. திருமணமாகி இத்தனை வருடங்களில் தற்போது சந்தியாவின் ஆசையை தெரிந்துகொண்ட சரவணன் அவரை ஐபிஎஸ் தேர்வுக்கு படிக்க வைக்கிறார். ஆனால் இது வீட்டிற்கு தெரியாமல் நடித்து வருவதால். இந்த விஷயம் வீட்டிற்கு தெரிய வரும்போது பெரிய பிரச்சினை வெடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் அதற்கு முன்பே தற்போது பெரிய பிரச்சினை உருவாகியுள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒளிபரப்பான எபிசொட்டில், சரவணன் சந்தியா இருவரும் தென்காசியில் ஒரு விபத்தில் மற்றவர்களை காப்பாற்றி சென்றனர். அது தொடர்பான செய்தி நியூஸ் பேப்பரில் வர அதை தற்போது சரவணனின் அப்பா படிக்கிறார். ஆனால் அது சரவணன சந்தியா என்று தெரிந்ததும் பாதியில் நிறுத்தி விடுகிறார்.

இதனால் சந்தேகப்படும் சரவணனின் தம்பி அந்த நியூஸ்பேப்பரை வாங்கி படித்து பார்க்கிறார். எப்படியும் சரவணனின் தம்பி இதை சிவகாமியிடம் சொல்லாமல் இருக்க மாட்டார். அப்படி சொல்லும்போது நீங்கள் இருவரும் தென்காசிக்கு எதற்காக போனீங்க என்று சிவகாமி கேட்க, கூடவே அர்ச்சனாவும் சேர்ந்துகொள்வார் இதனால் பிரச்சினை பெருசாக வெடிக்கவே அதிக வாய்ப்புள்ளது.

ராஜா ராணி 2 குடும்பம் ஒற்றுமையாக இருக்கிறது என்று காட்டப்பட்டாலும், சரவணன் சந்தியா சரவணனின் தங்கை அவரின் அப்பா ஆகிய நால்வரும் ஒரு டீமாகவும், சரவணனின் தம்பி ஒரு ட்ராக்கிலும், வில்லி அர்ச்சனா ஒரு டிராக்கிலும், செல்கின்றனர். இதில் சிவகாமி யார் பக்கம், செந்திலின் நிலை என்ன என்பது எல்லாம் தொடக்கத்தில் இருந்து சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கே புரியாத புதிராகத்தான் உள்ளது.

மேலும் மாமியாரை ஜெயிலுக்கு அனுப்ப ட்ரை பண்ணுவது, சொந்த வீட்டில் பணம் திருடுவது, கணவரின் தங்கைக்கு கெட்டபெயர் வாங்கி வைக்க ட்ரை பண்ணுவது, இவ்வளவும் செய்வது யார் என்று தெரிந்தும் அவரது நடிப்பை பார்த்து உண்மை என்று நம்புவது உள்ளிட்ட பல குற்றங்கள் இந்த சீரியலில் நடந்தாலும், இதை பார்ப்பதற்கும் ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த காட்சிகளை எல்லாம் பிடிக்காதவர்கள் கூட திட்டிக்கொண்டே இன்றைய எபிசோடை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது சரவணன் சந்தியா இருவரும் மாட்டிக்கொள்வது பெரிய பிரச்சினையாக வெடிக்கும். அதே சமயம் அடுத்த சில எபிசோடுகளில் அர்ச்சனா ஒரு தப்பு செய்து மாட்டிக்கொண்டால், அது சும்மா ஒரு ஜூஸ் குடிச்ச மாதிரி ஓடிவிடும்.

இதற்கு காரணம் அர்ச்சனாவுக்கு சீயஸான பிரச்சினை கொடுத்தால் அடுத்து எப்படி கதைவரும்? வில்லி அவர்தானே எல்லாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial raja rani 2 rating update with promo in tamil