Tamil Serial Baakyalakshmi Rating Update : உண்மை தெரிந்த ஒருவரையும் இப்படி பண்ணிட்டீங்களே டைரக்டர் சார் என்று ரசிகர்களை புலம்ப வைத்துள்ள சீரியல் பாக்யலட்சுமி. விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இந்த சீரியல் திருமணத்திற்கு மீறிய உறவை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
3 குழந்தைகள் மனைவி அம்மா அப்பா என அழகான குடும்பத்தில் இருக்கும் கோபி வீட்டிற்கு தெரியாமல் தனது பள்ளி தோழி ராதிகாவுடன் பழகுகிறார். இது முதலில் கோபியின் மகன் எழிலுக்கு தெரியவருகிறது. ஆனால் இவர் வீட்டில் சொல்ல வில்லை. அதன்பிறகு கோபியின் அப்பாவுக்கு தெரியவருகிறது. இதை கேட்டு கோபப்படும் கோபியின் அப்பா வீட்டில் சொல்வார் என்று பார்த்தால் அவரும் சொல்ல வில்லை.
ஆனால் ராதிகாவுடன் பழக கூடாது என்று கோபியின் அப்பா சத்தியம் வாங்கிக்கொள்கிறார். ஆனாலும் கோபி தொடர்ந்து ராதிகாவுடன் பழகி வர, ராதிகாவின் அம்மா கோபியை ராதிகாவை திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்துகிறார். இதை கேட்டு கோபியும் தலையை ஆட்ட தற்போது திருமண வேலைகள் மும்பரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே கோபியின் வீட்டிற்கு வரும் ராதிகாவின் குழந்தை மயூ உண்மையை கோபியின் அப்பாவிடம் சொல்லிவிடுகிறார்.
இதை கேட்டு அதிர்ச்சியாகும், கோபியின் அப்பா, இது குறித்து கோபியிடம் பேச. அவர் ராதிகாவை திருமணம் செய்யும் முடிவை கைவிடுவதாக இல்லை என்று சொல்லிவிடுகிறார். இதனால் குடும்பத்தினரிடம் சொல்லிவிடுவதாகப மாடியில் இருந்து கீழே இறங்கும் கோபியின் அப்பா சறுக்கி விழுந்து விடுகிறார். அதன்பிற அவரை மருத்துவமனையில் சேர்க்கும் போது அவருக்கு பக்கவாதம் என்றும், இனிமேல் பேசமுடியாது என்றும் சொல்லிவிடுகின்றனர்.
இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியாகின்றனர்.ஆனால் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சி இல்லை. ஏனென்றால், இது முன்பே எதிர்பார்த்தது தான். கோபியின் அப்பா இறந்துவிடுவார் என்று நினைத்தோம் ஆனால் அவர் இப்போது வாய் பேச முடியாமல் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு்ளளார். இரண்டும் ஒன்றுதான் என்று கூறும் ரசிகர்கள் அடுத்து என்ன, கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்வரா? அல்லது அப்பாவை கவனிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் வீட்டில் யார் எப்படி சென்றாலும், கோபியின் முடிவு என்றைக்கும் மாறாது என்று கூறி வருகின்றனர் அதே சமயம் கோபியை மிரட்டி வந்தவர் அவரது அப்பா. ஆனால் இப்போது அவதே படுத்த படுக்கயைாக ஆக்கிவிட்டீர்களே இனிமேல் கோபியை கேள்வி கேட்பது யார் என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் தாத்தா பாவம் இனிமேல் உண்மை சொலல நினைத்தாலும் முடியாது. கோபி பாடு ஜாலிதான் என்று கூறியுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “