Tamil Serial Baakiyalakshmi Rating Update : எப்போ பார்த்தாலும் டீச்சர் டீச்சர்னு சொல்லிட்டே இருந்தா தலைவன் கோபிக்கு கோவம் வராதா? டீச்சர்தான் தன் மனைவி என்று அவர் எப்படி ராதிகா உங்களிடம் சொல்லுவார்…?
விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்தாலும், வீணாக எதிர்பார்ப்பர் நமதுதவறு என்று ரசிகர்கள் எண்ணும் அளவுக்குதான் திரைக்கரை சென்றுகொண்டிருக்கிறது. கோபி தனது முன்னாள் காதலியுடன் ஊர் சுற்றுவது தெரிந்த தாத்தா பக்கவாதத்தால் படுத்தவிட்டார். இந்த உண்மை தெரிந்த எழில் இந்த பெண் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார். அதற்கு அவர் முயற்சிக்கவில்லை அதன் உண்மை..
இப்படி இருக்கும்போது அப்பா என்ன என்று கேட்கமாட்டார், பாக்யா கேட்டால் நாம் சத்தம் போட்டு பேசினால் அடங்கி விடுவார். அம்மா எப்போதும் நம் பக்கம்தான் போதா குறைக்கு இனியாவும் திருமணத்திற்கு ஒகே சொல்லிவிட்டாள் இனி என்ன கல்யாணம் தான் என்று மனதிற்கு சந்தோஷத்தில் மிதந்தாலும் கோபிக்கு அவ்வப்போது எழில் ட்விஸ்ட் கொடுத்து வருகிறார்.
ஆனாலும் அந்த ட்விஸ்ட்க்கெல்லம் ஆசர்ர ஆளா கோபி என்ன சொன்னாலும் தன் வேலையில் சரியாக இருந்துவிடுவார். ஆனால் இந்த பக்கம் பாக்யா சமையலே கதி என்று கிடக்கிறார். மற்றொரு புறம் மனது கோபி ராதிகா வீடே கதி என்று கிடக்கிறார். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். டைரக்டர் சார் கோபிக்கு ஆபீஸ்னு ஒன்னு இருக்கு அவருக்கும் உங்களுக்கும் ஞாபகம் இருக்கா ஏன்னா கோபி இப்போலாம் ஆபீஸ் போற மாதிரியே தெரியலையே.
ஒன்னு அவர் வீட்ல இருக்காரு இல்லனா ராதிகா வீட்ல இருக்காரு. இதையெல்லாம் பாக்கும்போது சீரியல் எந்தப்பக்கம் போகுதுனே தெரியலை. இப்படி இருக்க அன்று வெளியான ப்ரமோவில், கோபி ராதிகா கூட பேசிக்கிட்டு இருக்காரு. அப்போ சாப்பாடு ஆர்டர் பண்ணட்டுமானு கோபி கேட்க அதற்கு ராதிக நா டீச்சர்கிட்ட ஆர்டர் பண்ணிட்டேன்னு சொல்கிறாள். இதை கேட்கும் கோபி எப்போ பார்த்தாலும் டீச்சர் டீச்சர் என்று சொல்லி கோபப்படுகிறார்.
இதை கேட்ட ராதிகா டீச்சர் கூட உங்களுக்கு என்ன பிரச்சினை அவங்க பேரை கேட்டாளே இப்படி பேசுறீங்களே என் ப்ரண்ட்ஸ் எல்லாரையும் மீட் பண்ணிருக்கீ்ங்க ஆன டீச்சரை மீட் பண்றதுல உங்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியல என்று கேட்க கோபி எதையோ சொல்லி சமாளிக்கிறான். ராதிகா இதோடு விடமால் கோபி ஏன் டீச்சரை வெறுக்கிறார் என்று ஆராய நினைத்தால் சீரியல் இன்ட்ரஸ்டிங்க போகும். ஆனா டைரக்டர் அப்படி செய்ய வாய்பில்ல ராஜா…
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “