Tamil Serial Baakiyalakshmi Serial Rating Update : கோபி குசும்புக்காரன் இனியாகிட்ட எப்படி போட்டு வாங்குனார் பாத்தீங்களா என்று சொல்வதா… இப்படியும் ஒரு பெண் அம்மாவை பிடிக்காமல் இருப்பாளா என்று இனியாவை நினைத்து கோப்படுவதா என்று தெரியவில்லை.
விஜய் டிவியின் பாக்யலட்சுமி சீரியல் இப்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருந்தாலும் ஏராளமான விமர்சனங்களை சந்தித்து வருவது மறுக்க முடியாத உண்மை. மனைவியை பிடிக்காமல் முன்னாள் காதலியுடன் பழகுவது, மனைவிக்கு தெரியாமல் அவளின் வீட்டில் தங்குவது என இருந்த கோபி இப்போது முன்னாள் காதலியை திருமணம் செய்துகொள்ளும் நலைக்கு வந்துவிட்டார்.
இதற்காக அவர் மனைவி பாக்யவுக்கு தெரியாமலே விவாகரத்து வாங்கவும் முயற்சி செய்கிறார். ஆனால் இதை தெரிந்துகொண்ட பாக்யாவே என்னங்க இது சரியா இருக்கா… ஏன் கோபப்படுறீங்க என்று பணிவுடனே பேசுவது. மற்றவர்களிடம் போல்டா பேசும் பாக்யா கணவர் தப்பு செய்கிறார் என்று தெரிந்தும் கண்டுகொ்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அப்படியே அவர் கேள்வி கேட்டாலும் கோபி அதட்டினால் அப்படியே பணிந்துவிடுவார்.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் சாதித்து வரும் இந்த காலகட்டத்தில் இல்லத்தரசிகள் அதிகம் பார்க்கும் சீரியல்களில் இப்படி ஒரு பெண் கேரக்டர். ஏன் பாக்யா கோபியை எதிர்த்து பேசினால் அடுத்து சீரியலை எப்படி கொண்டுபோவது என்று தெரியவில்லையா இயக்குநர் சார்? கணவரே கண்கண்ட தெய்வம் என்று பெண்கள் வாழ்ந்தாலும், அவர் குடும்ப நல கோர்ட்டுக்கு கூட்டிக்கொண்டு போவது கூடவா தெரியாது?
அப்படியே தெரியவில்லை என்றாலும் அங்கிருந்த வக்கீல் இங்க எல்லாம் டைவர்ஸ் வாங்கத்தான் வந்திருக்காங்க என்று சொல்லும்போது நமக்கு இங்கு என்ற வேலை என்று பாக்ய கேரக்டர் யோசிக்காதா? அந்த அளவிற்கு கூட யோசிக்க முடியாதா… இப்படி எதுவுமே தெரியாத இந்த கேரக்டரை வைத்து நீங்கள் என்னதான் சொல்ல வருகிறீகள்?
இதற்கு இடையில் சுயநலமான முதல் மகன், பக்கவாதத்தினால் படுத்த மாமனார். அவரை பார்த்தக்கொள்னும் மாமியார், மனதை அலைபாய விடும் டீன்ஏஜ் மகள் இவர்களை கட்டுப்பாடுடன் வைப்பதற்கு பாக்யாவின் முயற்சி என்ன? அவர் தனியாக சமையல் வேலை செய்து சம்பாதிக்கிறார் என்ற ஒரு பிளஸ் பாயிண்டை தவிர பாக்ய கேரக்ட்வர் உருப்பாடியாக எனன செய்தது?
இப்போது இனியா +1 படிக்கிறார். அவளுக்கு ஒரு ஸ்டைலான அம்மா வேண்டும் என்பது போல் கட்டப்படுகிறது. ஊரில் எந்த குழந்தையாவது இப்படி சொல்வார்களா? இந்த சீரியலில் இதுவரை ஒளிபரப்பாகியுள்ள எந்த ஒரு எபிசோட்டிலும் இனியா பாக்யாவை தனது அம்மா என்று பெருமைபடும்படி ஒரு சீன் கூட இல்லை. பாக்யா மதர்ஸ்டேவில் பரிசு வாங்கி பாராட்டு பெற்றபோது கூட இனியாவின் ரியாக்ஷன் எதோ மாதிரிதான் இருந்தது.
இப்போது பள்ளியில் அட்மிஷன் முடிந்து பாக்யாவை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு இனியாவும் கோபியும் ஹோட்டல் சென்று சாப்பிடுகின்றனர். அப்போது இனியா எனக்கும் ஒரு ஸ்டைலான அம்மா இருந்தால் நல்லாருக்கும் என்று சொல்ல… உடனே கோபி நான் ஸ்டைலான அம்மாவை திருமணம் செய்துகொள்ளட்டுமா என்று கேட்கிறார். உடனே இனியா பண்ணிக்கோங்க டாடி என்று சொல்கிறாள். அப்போ பாக்யா குடும்பத்திற்கு பாசம் என்றால் என்னவென்றே தெரியாது போலும்…
கடைசி நேரத்தில் இவர்கள் அனைவரும் பாக்யாவை புரிந்துகொள்வதுதான் கடை என்று சொல்லிவிடாதீர்கள் டைரக்டர் சார் ஏனென்றால் பாக்ய தன்தை நிரூபிப்பது போன்ற பல காட்சிகளை வைத்துள்ளீர்கள் ஆனாலும் குடும்பத்தில் பாக்யா மீது பாசம் உள்ளவர்கள் அப்படியே இருக்கிறார்கள் பாசம் இல்லாதவர்கள் உதாசினப்படுத்துகிறார்கள் எந்த சேஜ்சும் இல்லை. இனிமேலாவது புதுசா எதாவது ட்ரை பண்ணுங்க கோபி மாட்டுவது போன்று ப்ரமோவில் காட்டிவிட்டு ஏமாற்ற வேண்டாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“