Tamil Serial Rating Bharathi Kannamma : என்னப்பா திடீர்னு சென்னையில் ஒருநாள் படத்தை போட்டு காட்றீங்கள் டைட்டில் தான் காப்பி அடிச்சிட்கிட்டு இருந்தீங்க இப்போ சீனையும் காப்பி அடிக்க ஆரம்பிச்சிட்டீங்களா….
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. பெயருக்கு ஏற்றார்போல் காதல் கதைதான் என்றாலும் இப்போது ட்ராக் மாறி வேறு திசையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. கணவன் மனைவி சந்தேகசம் நண்பர் துரோகம் என்ற பார்முலாவில் இருந்த இந்த சீரியல் இப்போது சம்பந்தமே இல்லாமல் ஹார்ட் ஆப்ரேஷன் தொடர்பான காட்சிகள் வருகிறது.
வெண்பா செய்த சூட்சியால் கண்ணம்மாவை பிரிந்த பாரதி இப்போது தனது சொந்தக்காரரின் மருத்துவமனையில் சீப் டாக்டர். அங்கே கண்ணம்மா அட்மின் ஆபீசர். ஆனால் என்ன பிரயோசனம். இன்னும் ரெண்டுபேரும் எலியும் பூனையுமாகத்தான் இருக்கிறார்கள். இதில் ஒரு ஆறுதலான விஷயம் என்னனா பாரதி இப்போது வெண்பாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று சொல்லிவிட்டார்.
இதனால் அவரது அம்மா வெண்பாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தொடங்கிவிட்டார். ஆனாலும் வெண்பா பிடி கொடுப்பதாக இல்லை. இப்படி ஒரு நிலையில், பாரதியின் மருத்துவனைக்கு வரும் ஒரு தம்பதியின் மகளுக்கு ஹார்ட் ஆப்ரேஷன் நடக்க பாரதி முயற்சி செய்கிறான். கதைக்கு சற்றும் தொடர்பே இல்லாத இந்த சீனை வைத்து கடந்த ஒரு வாரமாக ஓட்டிக்கொண்டிருக்கின்றனர்.
அதிலும் இதுநாள் வை கதையின் மெயின் வில்லியாக இருந்த வெண்பா இப்போது கதையில் இருக்கிறாரா என்ற குழப்பமே ரசிகர்களுக்கு வந்துவிட்டது. உண்மை தெரியவைக்க எந்த முயற்சியும் எடுக்காமல் கதையை ஜவ்வாக இழுத்துக்கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டு வருகின்றனர் ஆனாலும் நான் இப்போது சீரியலை முடிக்க மாட்டேன் என்று இயக்குநர் கங்கனம் கட்டிக்கொண்டு அலைந்துகொண்டிருக்கிறார்.
இதனால் சீரியல் மீதான எதிர்பார்ப்பு குறைய தொடங்கியுள்ள நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் சரிவை சந்தித்துள்ளது பாரதி கண்ணம்மா. எப்படி போனாலும் சரி பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மை இப்போதைக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதில் சீரியல் குழு உறுதியாக உள்ளது. அதனால்தான் அடுத்து என்ன சீன் வைக்கலாம் என்ற குழப்பத்தில் இப்படியெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
மேலும் இந்த ப்ரமோவை பார்க்கும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியல் முடியும்போது நாம இருப்பமோ இருக்க மாட்டமோ என்று கேட்டு வருகின்றனர். ரசிகர்ளின் கருத்துக்கோ அல்லது அவர்களின் விமர்சனத்திற்கோ எந்த பதிலும் இல்லை என்றாலும், சீரியல் பார்ப்பவர்கள் தொடர்ந்து விமர்சனக்கணைகளை தொடுத்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil