Tamil Serial Rating Bharathi Kannamma : என்ன ஒரு அதிசயம்... ஒரே நாள்ல சென்னைக்கு வந்து ஆபரேஷன் முடிச்சுட்டாங்க.. இந்த வாரம் ஃபுல்லா போகும்ன்னு நினைச்சோம்.. நல்ல வேளை என்று சொல்ல வைத்துள்ளது பாரதி கண்ணம்மா சீரியல்.
Advertisment
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்கு இடையே நடைபெறும் சந்தேகபோராட்டத்தை மையமாக கொண்ட இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த சீரியல் ரசிகர்களை கவர தவறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து ட்விஸ்கள் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் ஒருவித ஈர்ப்பு இருந்தது. ஆனால் இப்போது கதைக்கு தொடர்பே இல்லாமல் பல காட்சிகள் வந்து செல்கிறது. அந்த வகையில் இப்போது சென்னையில் ஒருநாள் படத்தை கையில் எடுத்துள்ளனர்.
சென்னையில் ஒருநாள் படத்தில் ஒரு இதயத்தை மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும்போது நிகழும் சம்பவங்கள் தான் கதை. இந்த இரண்டரை மணி நேர கதையை கடந்த ஒரு வாரகாலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த கதைக்கும் இந்த சீனுக்கும் என்ன தொடர்பு என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.
இந்த இதயத்தை கொண்டுசொல்லும் முயற்சியில் கண்ணம்மாதான் பாரதியை விட முன்யோசனையுடன் செயல்பட்டுகிறார் என்பதை காட்டுவதற்காக இந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது என்று எடுத்துக்கொண்டாலும், பாரதி கண்ண்ம்மாவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்தாரே தவிர அவள் நமக்கு துரோகம் செய்திருப்பாளா என்று யோசிக்கவே இல்லையே.
கண்ணம்மா எவ்வளவுதான அக்மார்க் நல்லவள் என்று நீங்கள் காண்பித்தாலும் பாரதி அவரை ஏற்றுக்கொள்வது போன்ற காட்சிகளை வைக்கமாட்டீர்கள். அப்படி வைத்தால் சீரியல் முடிந்துவிடமே.. இப்படி மற்றவர்கள் எல்லாம் கண்ணம்மாவை நம்பினாலும் பாரதி இப்போதைக்கு நம்புவார் என்ற நம்பிக்கை இல்லை.
இப்போது இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது இனிமேலாவது கதைக்கு வருவார்களா அல்லது கதைக்கு தொடர்பில்லாத மற்றொரு சீனை தேடி பிடிப்பார்களா என்பதற்கு இயக்குநர்தான் பதில் சொல்ல வேண்டும் வரும் வாரங்களில் பார்ப்போம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news