Tamil Serial Pandian Stores Rating Update : ஒற்றுமையே வலிமை… போராடினால் வெற்றி நமதே என்று நம்மை பேச வைத்துள்ள சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வெற்றியோ தோல்வியோ முயற்சி ரொம்ப அவசியம் என்று பலரும் சொல்வதுண்டு. இந்த கூற்றுக்கு பெருமை சேர்க்கும் விதமாகத்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அமைந்துள்ளது.
சகோதரத்துவம் கூட்டுக்குடும்பத்தின் நன்மை, உள்ளிட்ட பல தேவையான அம்சங்கள் நிறைந்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிஆர்பி ரேட்ங்கில் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியல் ஒரு மளிகை கடை அந்த கடையில் உரிமையாளர் பாண்டியனின் குடும்பம் இதை சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை மளிகை கடையாக இருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது சூப்பர் மார்கெட்டாக மாறியுள்ளது. அண்ணன் தம்பி 4 பேரும், சேர்ந்து இவ்வளவு நாள் சேர்த்த பணத்தை வைத்து ஒரு கடையை கட்டியுள்னர். முறையாக அனுமதி பெற்று கட்டப்பட்டுள்ள இந்த கடை தற்போது நகராட்சி அலுவலரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பெரிய ஷாக்காகத்தான் இருந்தது.
அதன்பிறகு தான் தெரியவந்தது அந்த அதிகாரி வேண்டுமென்றே கடைக்கு சீல் வைத்துள்ளார் என்று. அதற்கு காரணம் கண்ணனும் கதிரும் தான். ஜனார்த்தன் கடையில் பணம் எடுத்தது தொடர்பான நடநத்த சண்டையில் கண்ணனை ஒரு கோஷ்டி அடித்துவிட அந்த கோஷ்டியை கதிர் போட்டு தாக்கிவிட்டார். இந்த பிரச்சினையே தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு வினையாக முடிந்துள்ளது.
கதிர் அந்த அந்த ரவுடியின் அப்பாதான் அந்த அதிகாரி தனது மகன் மீது கை வைத்ததால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி சீல் வைத்துள்ளார். இந்த உண்மை முதலில் கண்ணனுக்கு தெரியவர அவன் ஐஸ்வர்யாவிடம் சொல்கிறான். இதை ஐஸ்வர்யா கதிரிடம் சொல்ல கதிரும் கண்ணனும் அந்த ரவுடியை தேடி செல்கின்றனர். இதற்கிடையே நகராட்சி அலுவலரை சந்திக்கும் மூர்த்திக்கு இந்த உண்மை தெரியவருகிறது.
இதனால் அதிரடி முடிவெடுக்கும் மூர்த்தி நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட அவரது குடும்பமும் அவரின் பின்னால் நின்று போராட்டத்தி்ல்’ அமர்ந்துள்ளனர். தொடர்ந்து ஜீவா கதிருக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவரும் தர்ணாவுக்கு வருகிறார். இதனால் அதிகாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் வீட்ல எல்லாரும் இப்படி ஒற்றுமையா இருந்த வெற்றிதான் என்றே கூறியுள்ளனர். மற்றொரு ரசிகர் அதிகாரி பையன் செய்தது தப்பு இதுல இவ்ளோ நியாயம் பேசுறாரு என்று கேட்டுள்ளனர். இப்படி சொந்த பிரச்சினைக்கு எல்லாம் அரசு அதிகாரத்தை பயன்படுத்தலாமா என்று கேட்டுள்ளனர். மேலும் ரசிகர்கள் பலரும் அடுத்து என்ன கடை திறப்பு விழாதான் என்று கூறியுள்ளனர்.
கதிரு எவ்வளவு பெரிய ஆக்ஷன் ஹீரோ ஆனா அவரையே அந்த ரவுடியை தேடி அலையுர மாதிரி பண்ணிட்டீங்களே சார் என்று கூறி வருகினறனர். போராட்டம் நல்லது தான் இருந்தாலும் இப்போ எவ்வளவோ வசதி வந்துவிட்டது அதையும் பயன்படுத்தியிருக்கலாம் என்று சொல்கின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “