Tamil Serial Pandian Stores Rating Update : குடும்பத்தில் ஒற்றுமையாக இருப்பது போல் இருந்தாலும், மனதளவில் அனைவருமே பிரிந்துதான் இருக்கிறார்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில்…
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர். சகோதர பாசத்திற்கும், கூட்டு குடும்பத்தின் நன்மைகளுக்கும் உதாரனமாக சொல்லப்படும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பு குறைந்து வருகிறது. பாண்டியன் சூப்பர் ஸ்டோர் திறந்ததில் இருந்து ஒற்றுமையாக இருப்பதுபோல் காண்பிக்கப்பட்டாலும், அவரவர் தங்களது வேலைகளை பார்ப்பதால், அந்த ஒற்றுமை காணாமல் போனது போலத்தான் உள்ளது.
பாண்டியன் ஸ்டோர் கட்டி முடிக்கும் போது, அதிகாரிகளால் பிரச்சினை ஏற்பட்டது. அந்த பிரச்சினையை ஒட்டுமொத்த குடும்பமும் எதிர்கொண்டு பிரச்சினையை தீர்த்தாலும், தற்போது அவரவர்களுக்கு ஒரு ஒரு பிரச்சினை வந்துகொண்டுதான் இருக்கிறது. மூர்த்தி கடையில் இருக்கிறார். ஜீவாவின் மாமனார் ஹார்ட் அட்டாக் என்பதால், மாமனார் கடையை பார்க்க ஜீவா சென்றுவிட்டார்.
முல்லைக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்து கதிரும் முல்லையும் சோகத்தில் உள்ளனர். ஐஸ்வர்யா மட்டும் கடையில் ஓடி ஆடி வேலை செய்து வருகிறார். இதில் ஜீவா நம்ம கடைக்கு வர முடியவில்லையே என்று வெறுப்பு, முல்லைக்கு ட்ரீட்மெண்ட் பார்ப்பதற்காக வீடு கட்டும் ப்ளானை ஸ்டாப் செய்தது மீனாவுக்கு கோபம், முல்லை ரிப்போர்ட் எடுத்து பார்த்தது கதிருக்கு பிரச்சினை.
இதற்கிடையே மீனாவின் அப்பா ஜனார்த்தனன் ஜீவாவை அங்கேயே வளைத்துபோல ஒரு மாஸ்டர் ப்ளானோடு சுற்றிக்கொண்டிருக்கிறார். இவர் ஹார்ட் அட்டாக் வந்தது போல் நடிக்கிறாரா அல்லது உண்மையிலேயே இவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டாதா என்பது இயக்குநருக்கே வெளிச்சம். அதேபோல், இந்த குடும்பத்தில் ஐஸ்வர்யா நல்லவரா கெட்டவரா என்பது புரியாத புதிராக உள்ளது.
ஆரம்பத்தில், குடும்த்தினர் பேச்சை கேட்காமல் நைட்டி அணிந்து கொள்வது என்று சுற்றிக்கொண்டிருந்த ஐஸ்வர்யாவுக்கும் மீனாவுக்கு அடிக்கடி சண்டை வந்துகொண்டிருந்தது. ஆனால் இப்போது வீடு கட்டும் ப்ளான் ஸ்டாப் ஆனதும் மீனாவும் ஐஸ்வர்யாவும் அதுப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்குள் என்ன நடக்குது என்றே தெரியவில்லை.
மேலும் ஐஸ்வர்யா குடும்பத்திற்காக தனது படிப்பையே தியாகம் செய்துள்ளார் என்றரல் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வளவு சம்பவங்கள் அரங்கேறி வருவதால், இவர்களிடம் ஒற்றுமை இருக்கிறதா கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதை யூகிக்க முடியவில்லை. இந்த சீரியலை பார்த்து ரீமெக் செய்த பல சீரியல்கள் முடிந்துவிட்டன ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்னும் களைக்கட்டி வருகிறது.
இந்நிலையில் இன்றைய ப்ரமோவில், கண்ணன் எக்ஸ்சாம்க்கு படிக்காமல் மொபைல் பார்த்துக் கொண்டிருக்க ஐஸ்வர்யா அவனை திட்டுகிறாள். அப்போது அவன் காலேஜில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி சொல்கிறன். அதை கேட்டு ஐஸ்வர்ய படத்தில்டவுட் இருந்த கேக்காம இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாயா என்று கேட்க, நீ என்ன டீச்சர் மாதிரி கேள்வி கேக்ற என்று கண்ணன் கேட்கிறான் இத்துடன் ப்ரமோ முடிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil