scorecardresearch

கடைசில கோபியே ராதிகாவ வேண்டானு நினைக்க வச்சிட்டீங்களே… சபாஷ்

Tamil Serial Update : கோர்ட்டுக்கு வந்து உள்ளே நடப்பதை பார்த்தாவது ஒரு டவுட் வந்திருக்கனுமே… ஆனா எதுவுமே வரலையே என்ற விமர்சனம் தான் வருகிறது.

கடைசில கோபியே ராதிகாவ வேண்டானு நினைக்க வச்சிட்டீங்களே… சபாஷ்

Tamil Serial Rating Baakiyakashmi Serial : ஒன்னுமே சொல்லா கூட்டிக்கிட்டு போனதுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் என்று தலைவன் கோபியை புலம்ப வைத்த இயக்குநருக்கு நன்றி என்று சொல்லும் அளவுக்கு பாக்யலடசுமி சீரியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முன்னாள் காதலியை திருமணம் செய்ய நினைக்கும் கோபி, அதற்காக பாக்யாவை விவாகரத்து செய்ய முயற்சிக்கிறான்.

இதில் பாக்யாவிடம் ஏதோ சொல்லி விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்தும் வாங்கிவிடுகிறான். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிரித்துள்ள நிலையில், நேற்றைய எபிசோட்டில் இனிமேல், ராதிகா தான் எனக்கு எல்லாம்.பாக்யாவை இனிமேல் என் மனைவி என்று சொல்லாதே என்று ராதிகாவிடம் ரொமான்ஸ் நாடத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோர்டில் இருந்து வந்த நோட்டீஸை ஜெனி கையில் இருந்து வாங்க கோபி பட்ட பாடு இருக்கே… இப்படி கஷ்டப்படுவதற்கு பேசமாக பாக்யா கூடவே கோபி வாழ்ந்துவிட்டு போய்விடலாம் என்று நினைக்கும் அளவுக்கு தான் இருக்கிறது. அந்த நினைப்பை உண்மையாக்கும் வகையில் இன்றைய எபிசோடு அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

இன்றைய ப்ரமோவில், மற்றவர்கள் விவாகரத்து வழக்கை விசாரிப்பதை பார்க்கும் கோபி, இதேபோலத்தான் நம்மளையும் விசாரிப்பாங்களோ என்று எண்ணிக்கொண்டு இதுக்கு பேசாம ராதிகா வேண்டாம் என்று போய்விடலாமா என்றும் யோசிக்கிறான். ஆனால் இங்கு புழுக்கமாக இருக்கிறது வெளியில் இருப்போம் என்று சொல்லி பாக்யாவை வெளியில் அழைத்து வந்துவிடுகிறான.

வெளியில் இருக்கும் வக்கீலிடம், இங்க வந்தவங்க எல்லாரும் விவாகரத்து வாங்கத்தான் வந்துருக்காங்களா என்று கேட்க, வக்கீல் குடும்ப பிரச்சினைதான் இப்போ பெரிய பிரச்சினை. என்று சொல்கிறார். அதற்கு பாக்யா ஏதாவது பேசி தீர்த்துக்கொண்டு சேர்ந்து வாழமுடியாதா என்று கேட்க வக்கீல் ஷாக் ஆகிறார். அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இதன்பிறகு என்ன நடக்கும் என்று அனைவரும் எதிர்பாக்கிறார்கள் ஆனால், எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு பாக்யா அங்கு சென்று எல்லாத்துக்கும் சம்மதம் என்று சொல்வது போலத்தான் கதை வரும்.

ஏனென்றால் பாக்யா உலகம் தெரியாதவர் என்று பலரும் சொல்லும அளவுக்குதான் இந்த சீரியல் இருக்கிறது. கணவனே கண்கண்ட தெய்வமாக இருப்பது தவறில்லை. ஆனால் அவர் எதற்காக கையெழுத்து வாங்குகிறார் என்று யோசிக்க கூடவா கணவரின் அனுமதி வேண்டும். அப்படியே அனுமதி வேண்டும என்று சொன்னாலும சமையல் வேலையை விட்டுவிடும் படி கோபி சொல்கிறார் ஆனால் அதை பாக்யா கேட்பதில்லையே ஏன் என்ற கேள்வி எழும்புகிறது.

கணவர் பற்றிய விஷயம் என்றால் அவர் எனன சொன்னாலும் கேட்கும் பாக்யா சம்பாத்தியம் சுயமரியாதை என்று வரும்போது கணவருக்கு நிகராக தானும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அப்படி இருக்கும் போது கையெழுத்து போடும்போது பத்திரத்தில் என்ன இருக்கிறது என்று பார்த்திருக்க வேண்டும் அல்லவா.. அப்படி இல்லை என்றாலும், கோர்ட்டுக்கு வந்து உள்ளே நடப்பதை பார்த்தாவது ஒரு டவுட் வந்திருக்கனுமே… ஆனா எதுவுமே வரலையே என்ற விமர்சனம் தான் வருகிறது.

இதனால் இந்த சீரியல் சற்று விமர்சனத்தை சந்தித்தாலும், வாழகையில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் உழைத்தக்கொண்டிருக்கும் பாக்யாவுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் சப்போர்ட் இருக்கதான் செய்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial rating update with promo baakiyalakshmi serial