Tamil Serial Bharathi Kannamma Update : அவங்க சமையல் அம்மா… நீங்க டாக்டர் அப்பாவா என்ன இப்படியே இழுத்துக்கிட்டு போய்ட்டே இருந்தா என்ன அர்த்தம் இதுக்கு ஒரு முடிவே கிடையாதா என்று கேட்கும் அளவுக்கு விமர்சனங்களை சந்தித்து வருவது பாரதி கண்ணம்மா.
மக்கள் மத்தியில் சீரியல் இப்போது முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது. தை பயன்படுத்திக்கொள்ளும் தொலைக்காட்சிகளும் அடிக்கடி புதிய சீரியல்களை கொடுத்து வருகிறது. இந்த சீரியல்கள் அனைத்து மக்களை கவர்கிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் ஒரு சில சீரியல்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், அதன் திரைக்கதையை ஜவ்வாக இருந்து போர் அடிக்க வைத்துவிடுவார்கள்.
தற்போது இந்’த ஜவ்வு இழுப்பு விமர்சனத்தை பெற்றுள்ளது பாரதி கண்ணம்மா. விஜய் டிவியின் ப்ரைம் சீரியலாக பாரதி கண்ணம்மா கடந்த சில மாதங்களாக ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் உள்ளது. ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் கதையே முடிந்துவிடும். ஆனால் அதை செய்யாமல், கதையில் ட்விஸ்ட் கொடுக்கிறேன் என்ற பெயரில், ஜவ்வாக இழுந்து சீரியல் மீதான ஆர்வத்தையே குறைத்துவிடுகினறனர்.
அதிலும் தனது அப்பா யார் என்று லட்சுமி கண்டுபிடிக்க முயற்சிப்பது எல்லாம் வேற ரகம். லட்சுமி அப்பாவை தேடுகிறார். அவளுடன் பிறந்த ஹேமா ஏன் தனது அம்மாவை தேடவில்லை. அவரும் தனது அம்மாவை தேட தொடங்கினால் உண்மை வெளிவந்துவிடுமே என்பதால் அதை விட்டுவிட்டீர்களா டைரக்டர் சார். அதேபோல் பாரதி ஒருவனை தவிர மற்ற அனைவருக்கும் ஹெமா கண்ணம்மாவின் பொண்ணுனு தெரியும். ஆனால் பாரதிக்கு மட்டும் இந்த உண்மை தெரியவதில் என்ன சிக்கல்.
அதேபோல் முன்பு சொன்னதுபோல யாருடைய தயவும் இல்லாமல் வாழ்வேன் என்று சொல்லி சென்ற கண்ணம்மா இப்போது தனது மகளுக்கு அப்பா வேண்டும் என்று பாரதியிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார். பாரதி இந்த பொய்யயை ஸ்ராங்காக நம்புவதற்கு காரணம் என்ன என்பதை அறிய உண்மையை கண்டறிய முயற்சி செய்யலாமே அதை ஏன் செய்யவில்லை.
அதேபோல் முன்பெல்லாம் மாவு அரைப்பது உள்ளிட்ட சில வேலைகளை செய்துகொண்டிருந்த கண்ணம்மா இப்போ என்ன செய்துகொண்டிருக்கிறார் என்றே தெரியவில்லை. வீட்டில் பேசிக்கொண்டிருக்கிறார். பாரதியிடம் கெஞ்சுகிறார். லட்சுமியிடம் அழுகிறார். வீர வசனம் பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா இப்போ சபதத்தை மறந்து பாரதியிடம் கெஞ்சுவது சரியா? தைரியமாக முடிவெடுத்து தான் நல்லவள் என்பதை நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டாமா?
இப்படி பல குறைகள் இருந்தாலும், இந்த சீரியலுக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதுவே இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கிற்கு முக்கிய காரணம். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரமோ சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதில் பாரதியிடம் பேசும் லட்சுமி உங்களை அங்கிள் என்று கூப்பிடுவதை விட டாக்டர் அப்பா என்று கூப்பிடட்டுமா என்று கேட்ட முதலில் யோசிக்கும் பாரதி அதன்பிறகு சம்மதிக்கிறான்
இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த தொடரை உச்சக்கட்ட பொறுமை உள்ள நபர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்று கூறியுள்ளனர். மற்றொருவர் வலிமை இருக்கிறவன் இந்த சீரியலை எத்தனை தடவை வேணாலும் பார்ப்பான் என்று கூறியுள்ளார். மேலும் எப்ப பார்த்தாலும் பாரதி கண்ணம்மா டைக்டருக்கு காமெடி பண்றதே வேலையா போச்சு என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil