Tamil Serial Baakiyalakshmi Rating Update : தினம் தினம் புதுசு புதுசா என்ன என்னமோ பண்ணீங்க ஆன உண்மையை மட்டும் சொல்லவே மாட்றீங்களே என்று ரசிகர்கள் புலம்ப வைக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றான இந்த சீரியல் திருமணத்திற்கு மீறிய உறவை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்படடுள்ளது.
வீட்டின் தலைவர் கோபி தனது மனைவிக்கு தெரியாமல் பள்ளி தோழியுடன் பழகுகிறார். இதை வீட்டில் யாருக்கும் தெரியாமலும் பார்த்துக்கொள்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் மகன் எழிலுக்கு தெரிந்துவிடுகிறது. அவர் அப்பாவை எச்சரிப்பதோடு நிறுத்திவிடுகிறார். அதன்பிறகு கோபியின் அப்பாவுக்கு தெரியவருகிறது. அவர் கோபியின் தோழி ராதிகாவின் அம்மாவிடம் சென்று சண்டையிடுகிறார்.
இதனால் கோபிக்கும் அவரது அப்பாவுக்கும் பிரச்சினை வெடிக்க இருவரும் பார்க்கும்போதெல்லாம் முட்டிக்கொள்கின்றனர். கோபியின் உறவு இருவருக்கு தெரிந்தும், வீட்டில் சொல்லாதது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது. கோபியின் அப்பா பாக்ய கஷ்டப்படுவார் என்று சொல்லாமல் இருப்பதாக கூறுகிறார். ஆனால் இப்போதே கோபி செய்யும் தொல்லையில் பாக்ய நிம்மதி இல்லாமல்தான் இருக்கிறார்
இது ஒரு பக்கம் இருக்க ராதிகாவின் வீட்டில் அவரின் அம்மா கோபியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறார். இதனால் கோபி அடுத்து என்ன முடிவு செய்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டால், பாக்யாவின் நிலைமை என்னவாகும் என்றும், அப்படியோ பாக்யாவுக்கு கோபி டைவர்ஸ் கொடுத்தாலும், அவரது அப்பா விடுவாரா என்று பரப்பான கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில், இன்றைய எபிசோட்டில் கோபி ராதிகாவின் வீட்டிற்கு வருகிறார். அப்போது ராதிகாவின் அம்மா அவரது உறவினர்களிடம், கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று சொல்ல அதை கேட்டு மயூ அதிர்ச்சியாகிறார். இதனால் இந்த விவகாரத்தில் அடுத்து மயூவின் ஆக்ஷன் என்னவாக இருக்கும் என்றும், மயூ கோபியை அப்பாவாக ஏற்றுக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே வீட்டிற்கு வரும் கோபி டிபன்பாக்ஸை காரில் வைத்துவிட்டு வர அதை எடுக்க செல்லும் பாக்யாவுக்கு காரில் அதிர்ச்சி காத்திருக்கிறது. அத்துடன் எபிசோடு முடிந்துவிட்டது. இதேபோன்று கடந்த வாரம் கோபி போன் பேசுவதை பாக்யா பார்த்துவிடுவது போல காட்சிகள் இருந்தது. ஆனால் ஏமாற்றும் காட்சியாக அமைந்துவிட்டது. அதேபோலத்தான் இந்த காட்சியும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று ரசிகர்கள் கூறி வருகினறனர்.
ராதிகா வீட்டில் திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தல், தனது வீட்டில் அப்பா தனது காதலுக்கு முட்டுக்கட்டை என கோபிக்கு வருவது எல்லாம் சிக்கலாக அமைந்துள்ளது. இதனால் கோபியின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், எந்த சிக்கல் வந்தாலும் கோபியை அதில் இருந்து டைரக்டர் எஸ்கேப் பண்ணி விடுவார் என்று கூறி வருகின்றனர். ஆனால் ரசிகர்கள் பலரும் எப்படி கொண்டுபோனாலும் சீக்கிரமா உண்மையை சொல்லிவிடுங்கள் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “