Advertisment
Presenting Partner
Desktop GIF

சராசரி மனிதனாக மாறிய கோபி... அப்போ ராதிகாவுடன் திருமணம்?

Tamil Serial Rating : பாக்யா நினைத்தது நடந்துவிடடால். மகன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள ஈஸ்வரியின் நம்பிக்கை என்னவாகும் என்பது கேள்விக்குறி.

author-image
D. Elayaraja
New Update
சராசரி மனிதனாக மாறிய கோபி... அப்போ ராதிகாவுடன் திருமணம்?

Tamil Serial Rating Baakiyalakshmi Update : கஷ்டம் வந்தால்தான் ஒருவரின் அருமை புரியும் என்பதை போல் அப்பா அவ்வளவு சொல்லியும் கேட்காத கோபி இப்போது அப்பாவை நினைத்து மனம் வருந்திக்கொண்டிருக்கிறார். நீங்கள் நினைப்பது சரிதான இது பாக்யலட்சுமி சீரியல் கதைதான்.

Advertisment

விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாக்யலட்சுமி தற்போது குடும்ப பெண்களிடையே கண்ணீரை வரவழைக்கும் சீரியலாக மாறியுள்ளது. அப்பாவின் பேச்சை கேட்காமல் பள்ளி தோழியுடன் பழகி வந்த கோபி அவளை திருமணம் செய்துகொள்ள தயாராகிறான். இதை தெரிந்துகொண்ட அப்பா அவனை கண்டிக்க அவன் கேட்கவில்லை. இதனால் குடும்பத்தினரிடம் உன்னைப்பற்றி உண்மையை சொல்கிறென் என்று சொல்லி மாடியில் இருந்து கீழே வருகிறார்.   

அப்போது படியில் ஸ்லிப் ஆகும் அவர், கீழே விழுந்து விடுகிறார். அடிப்பட்ட அவரை ஹாஸ்பிடலில் சேர்க்க அங்கு டாக்டர் அவருக்கு பக்கவாதம் இனி பேச்சு வராது என்று சொல்லிவிடுகின்றனர். இதை கேட்டு கோபி மன மகிழ்ச்சி அடைவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கோபி ஒரு சாராரி மனிதன் என்பதை உணர்ந்து தன்னால் தான் தனது அப்பா இந்த நிலைமைக்கு சென்றுவிட்டார் என்று மனதிற்குள் புழுங்கிக்கொண்டிருக்கிறார்.

இத்தனை நாள் கோபி எப்போது வீட்டில் மாட்டுவார் என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள் ரசிகர்கள் பலரும் இந்த காட்சியை மிகவும் வருத்தமடைந்து வருகினறனர். ஆனால் இதற்காக கோபி ராதிகாவை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பாரா என்று கேட்டால் அதற்கு பதில் இல்லை. அப்பாவின் நிலைமையை எண்ணி கோபி ராதிகாவை கைவிட்டால், ராதிகாவும் அவரது அம்மாவும் கோபியை பழி வாங்க நினைக்கலாம்.

அப்போது கோபியின் மனைவி தனது நெருங்கிய தோழி பாக்யாதான் என்று ராதிகாவுக்கு தெரியவரும். அதன்பிறகு என்ன நடக்கும் என்று ஒருபுறம் யோசித்தாலும், அப்பா வாழ்ந்து முடித்தவர் அவருக்காக ஃபீல் பண்ண வரைக்கும் போதும் உன் வாழ்ககையை பாருடா கோபி என்று நினைத்து கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டால், பாக்யா நினைத்தது நடந்துவிடும். மகன் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ள ஈஸ்வரியின் நம்பிக்கை என்னவாகும் என்பது கேள்விக்குறி.

இந்த இரண்டில் எது நடக்கும் அல்லது இது இல்லாமல் கதை வேறு வழியில் பயணிக்குமா என்பது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்கள் இப்படியே போய்க் கொண்டிருக்கும் கோபியின் அப்பா இன்னும் பல எபிசோடுகள் இப்படியே இருப்பார் அவரது வீட்டிலும் அவரை நினைத்து புலம்பிக் கொண்டிருப்பார்கள் என்று கூறி வருகினறனர்.

மேலும் பல ரசிகர்கள் பல ஆண்டுகளாக சினிமா மற்றும் சீரியல் வழக்கத்தை மாற்ற முடியுமா என்ன? ஒரு குடும்பத்தில் ஒருவர் செய்யும் தவறு அந்த குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தெரிந்திருந்தால், அவருக்கு இப்படி ஏதாவது விபத்து ஏற்பட்டு பேச முடியாத நிலை ஏற்படும் காட்சிகள் வருவது வழக்கம் தான். இறுதியில் அவரு வந்து உண்மையை சொல்லி கதையை முடித்து வைப்பார். இது திரைப்படமாக இருந்தால் சிறிது நேரத்தில் முடிவு கிடைத்துவிடும்.

ஆனால் சீரியல். சும்மாவே ஜவ்வு மாதிரி இழுப்பதாக கூறி வரும் நிலையில், தற்போது பக்கவாதம் என்ற கண்டன்ட் கிடைத்துள்ளது. இந்த வார்த்தையை ரசிகர்கள் வெறுக்கும் அளவுக்கு பக்கவாதம் தொடர்பான காட்சிகள் அரங்கேறும் என்பதில் சந்தேகமில்லை.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment