பாரதிக்கு செக் வைத்த கண்ணம்மா... அதிர்ச்சியில் உறைந்த வெண்பா

Tamil Serial Update : கண்ணம்மாவின் பிறந்த நாளுக்கு கணவன் பாரதி, வில்லி வெண்பா மற்றும் கண்ணம்மாவின் மாமனார் மாமியார் என அனைவரும் வந்துள்ளனர்.

Tamil Serial Update : கண்ணம்மாவின் பிறந்த நாளுக்கு கணவன் பாரதி, வில்லி வெண்பா மற்றும் கண்ணம்மாவின் மாமனார் மாமியார் என அனைவரும் வந்துள்ளனர்.

author-image
D. Elayaraja
New Update
பாரதிக்கு செக் வைத்த கண்ணம்மா... அதிர்ச்சியில் உறைந்த வெண்பா

Bharathi Kannamma Serial Rating Update : அப்பாடா இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்த ரகசியத்தை இப்போ சொல்லிட்டீங்களே சூப்பர் என்று சொல்லவைத்துள்ள சீரியல்தான் பாரதி கண்ணம்மா.

Advertisment

கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்தால் இருவரின் வாழ்க்கையும் நகரம் தான் என்பதற்கு சிறந்த உதாரணம் பாரதி கண்ணம்மா. தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கண்ணம்மாவை தனது தோழியின் பேச்சை பேச்சை கேட்டு பாரதி வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறான்.அவன் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைரலாக்கியத்துடன் இருக்கும் கண்ணம்மா 8 வருடங்களுக்கு பிறகு கணவரின் குடும்பத்தை சந்திக்கிறாள்.

அதன்பிறகு கண்ணம்மாவுக்கு தனது குழந்தைகள் பற்றி தெரியவந்தது பாரதி விவாகரத்து கேட்டது என பல திருப்பங்கள் அரங்கேறி வந்தாலும், இறுதியாக கண்ணம்மாவின் குழந்தையான லட்சுமி தனது அப்பா யார் என்ற கேள்விக்கு கண்ணம்மா இதுவரை பதில் சொல்லாமல் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் தான்னை கிண்டல் செய்தவர்கள் மத்தியில் தனது பிறந்தநாள் அன்று லட்சுமியின் அப்பா யார் என் சொல்வதாக கண்ணம்மா சொல்லிவிடுகிறாள்.

இதனிடையே கண்ணம்மாவின் பிறந்த நாளுக்கு கணவன் பாரதி, வில்லி வெண்பா மற்றும் கண்ணம்மாவின் அப்பா அம்மா மாமனார் மாமியார் என அனைவரும் வர அப்போது லட்சுமி தனது அப்பா யார் என்று கேட்கிறாள் இதற்கு பதில் சொல்லும் பாரதி உனது அப்பா இவர்தான் என்று கண்ண்மாவையே கைகாட்டுகிறான். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தற்போது கண்ணம்மாவே லட்சுமியின் அப்பா பாரதி தான் என்ற உண்மையை சொல்லிவிட்டாள்.

Advertisment
Advertisements

இதனை கேட்டு அனைவரும் அதிர்ச்சியான பாரதியோ இப்போ என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறான். அவனுடன் வந்த வெண்பாவும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறாள். இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்பாடா இப்பவாது உண்மையை சொன்னீங்களே போதும் சாமி என்று சொல்லி வருகின்றரனர். மேலும், கண்ணம்மா உண்மையை சொன்னாலும், பாரதி அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை. அவனுக்கு வெண்பா சொல்வதே வேத வாக்கு என்று கூறி வருகின்றனர்.

ஆனாலும் பாரதி கண்ணம்மா சீரியலின் தீவிர ரசிகர்கள் இப்போது தான் கதை மீண்டும் சூடுபிடிக்கிறது என்றும் லட்சுமியின் அடுத்த வேலை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி வருகினறனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bharathi Kannamma Serial Vijay Tv Serial 2

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: